2007 டி20 உ.கோ தொடரில் சச்சின், கங்குலி, டிராவிட் விளையாடததற்கு இவரே காரணம் – வெளியான தகவல்

Dhoni
- Advertisement -

2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உலக கோப்பை தொடருக்கு இந்திய சீனியர் வீரர்களான சேவாக், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்ற பலரும் ஆடவில்லை. பந்துவீச்சிலும் அணில் கும்ப்ளே போன்றோர் விளையாடவில்லை. இளைஞர்களுக்கு வழி விடும் நோக்கில் அப்போது இருந்த இளம் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரைச்சுற்றி இளம் வீரர்களை வைத்து ஒரு அணியை அமைத்து கொடுத்து அனுப்பினர்.

T20 wc

- Advertisement -

அந்த தொடரில் தோனி தலைமையில் இந்திய அணி அபாரமாக கோப்பையை வென்றது. இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் இந்த சீனியர் வீரர்கள் எல்லாம் ஆடாததற்கு காரணம் யார் என்று முன்னாள் இந்திய அணியின் மேலாளர் லால் சந்த் ராஜ்புட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் :

டி20 உலக கோப்பை தொடரில் நாமெல்லாம் ஆட வேண்டாம் என்று சச்சின் மற்றும் கங்குலியிடம் ராகுல் டிராவிட் கூறினார். இதை அவர்களும் ஒப்புக்கொண்டனர். இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு நேராக ராகுல் ட்ராவிட் தலைமையிலான அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுவிட்டது. மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக மூவரும் முடிவு செய்தனர்.

சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் உலக கோப்பை தொடரில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தனர் .இந்திய அணி கோப்பையை வென்று விட்டது என்று தெரிவித்துள்ளார் லால் சந்த் ராஜ்புட். ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான அணி தோற்று இருந்தது.

- Advertisement -

மேலும் வங்கதேசத்துக்கு வங்கதேச அணிக்கு எதிராக லீக் தொடரை தோற்று விட்டு வெளியே வந்தது. இவற்றையெல்லாம் மனதில் வைத்துதான் இந்த தொடரிலும் மூவரும் கலந்து கொண்டால் மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று முடிவு செய்து இருவரும் விலகி இருப்பார்கள் என்று தெரிகிறது.

தோனி தலைமையிலான இந்த அணி டி20 உலகக்கோப்பையை வென்றதினால் அவரது விருப்படியே 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியும் அமைந்தது. அதனையும் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement