17 வருஷமா ஒரே டெம்பிளேட்.. சி.எஸ்.கே அணியின் வீழ்ச்சிக்கு இவர்தான் காரணம் – லட்சுமிபதி பாலாஜி குற்றச்சாட்டு

L Balaji
- Advertisement -

ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை கோப்பைகளை வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோனியின் தலைமையின் கீழ் 5 கோப்பைகளை வென்றிருந்தது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை அணி பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை கூட எட்டாமல் மிகப்பெரிய சரிவினை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதற்கு அடுத்து சென்னை அணியின் ஆட்டம் படு மோசமாக இருந்து வருகிறது.

சி.எஸ்.கே அணியின் சரிவுக்கு இதுவே காரணம் : லட்சுமிபதி பாலாஜி

கடந்த ஆண்டு பத்தாவது இடத்தை பிடித்து வெளியேறிய சி.எஸ்.கே அணியானது இம்முறை நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் பலமான கம்பேக் கொடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் இம்முறையும் இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து படுமோசமான நிலையை சந்தித்துள்ளது.

- Advertisement -

இனிவரும் போட்டிகளிலும் இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டுக்கான பிளேஆப் வாய்ப்பை எட்ட முடியாதது மட்டுமின்றி புள்ளி பட்டியலில் மீண்டும் கடைசி இடத்தை பிடித்து வெளியேறும் என்றும் பல்வேறு விமர்சனங்கள் சி.எஸ்.கே அணியின் மீது இருந்து வருகின்றன. இந்நிலையில் இப்படி கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை அணி படுமோசமான நிலையை சந்தித்தற்கு காரணமே தமிழ்நாட்டு வீரர்களை சரியாக தேர்வு செய்யாததும், ஒரே மாதிரியான பயிற்சி முறையும் தான் காரணம் என முன்னாள் சி.எஸ்.கே வீரரான லட்சுமிபதி பாலாஜி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : ஸ்டீபன் பிளமிங்கின் கீழ் ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் நான் பணியாற்றியுள்ளேன். ஒரு அணியின் பயிற்சியாளராக இருக்கும்போது 17 ஆண்டுகளாக ஒரே டெம்ப்ளேட்டை கடைபிடித்து வந்தால் அது கை கொடுக்காது. தற்போது டி20 போட்டிகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டன. எனவே பயிற்சி முறையும் மாற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு திறமையான வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்தும் அவர்கள் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் கூறிய அந்த வார்த்தைகள் தான் எனக்கு நம்பிக்கை தந்தது – முகுல் சவுத்ரி வெளிப்படை

தோனி கேப்டனாக இருக்கும் போது அவர் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி விட்டார். ஆனால் தற்போது சென்னை அணி தடுமாறி வருகிறது. தமிழகத்திலிருந்து ஏகப்பட்ட வீரர்கள் திறமையாக செயல்பட்டாலும் அவர்கள் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்படுவதில்லை. இப்படி உள்ளூர் திறமைகளை கண்டறிந்து அணியில் சேர்க்காததும் சென்னை அணியின் சரிவிற்கு ஒரு முக்கிய காரணம் என லட்சுமிபதி பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement