இப்போ நம்ம டீமுக்கு தேவையே அந்த மாதிரி பிளேயர்ஸ் தான். அது உங்களால முடியும் – எல்.பாலாஜி ஓபன்டாக்

Balaji
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகள் துவங்கிய பின்னர் நகரங்களில் இருந்து மட்டும் வந்த வீரர்களுக்கு மத்தியில் கிராமப்புறத்திலும் இருந்தும் பல வீரர்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வந்து ஐபிஎல் தொடரில் இடம் பிடித்ததோடு மட்டுமின்றி தேசிய அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். இப்படி கிரிக்கெட் போட்டிகள் தற்போது கிராமங்களிலும் அதிக அளவு வளர்ந்துள்ளதாக நெல்லையில் தொடங்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பிலான கிரிக்கெட் அகாடமி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜி பேசியுள்ளார்.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக சில கிரிக்கெட் அகாடமிகள் தமிழகத்தில் ஆங்காங்கே துவங்கப்பட்ட வேளையில் தற்போது நெல்லையிலும் நேற்று சிஎஸ்கே அணி சார்பாக ஒரு கிரிக்கெட் அகாடமி துவங்கப்பட்டது. இந்த கிரிக்கெட் அகாடமியின் துவக்க விழா நெல்லையில் உள்ள சங்கர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

- Advertisement -

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக எல் பாலாஜி பல்வேறு விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : நமது சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான தோனியே கிராமத்திலிருந்து தான் வந்துள்ளார். தற்போது அவர் எப்படிப்பட்ட விளையாட்டு வீரராக இருக்கிறார் என்பது உலகம் அறியும். கடந்த காலங்களில் மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து தான் வீரர்கள் அதிக அளவில் வந்துள்ளார்கள்.

Balaji

ஆனால் இன்று அப்படி கிடையாது கிராமத்திலும் இருந்தும் பல கிரிக்கெட் வீரர்கள் விளையாட வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான வசதியும், வாய்ப்பும் தற்போது பிரகாசமாக உள்ளது. நான் எப்போதும் அப்துல் கலாமை நினைக்கக் கூடியவன். அவர் கனவு காணுங்கள் என சொன்னது கண்டிப்பாக நிறைவேறும். அதன்படி மாணவர்கள் கனவு காண வேண்டும் அது கண்டிப்பாக நடக்கும்.

- Advertisement -

கிராம பகுதிகளில் தற்போது கிரிக்கெட் மிக நன்றாக வளர்ந்திருக்கிறது. தற்போது இந்திய அணிக்கு தேவையே ஆல்ரவுண்டர்கள் தான். கிரிக்கெட்டில் திறமை இருந்தால் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். யார் வேண்டுமானாலும் பெரிய அளவில் வரலாம். எனவே நிச்சயம் தமிழ்நாட்டில் இருந்தும் அதில் குறிப்பாக கிராமத்தில் இருந்து வரும் ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இதையும் படிங்க : அவர் நிரந்தர இடத்தை பிடிச்சுட்டாரு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஜெயிக்க அதை செய்ங்க – இந்திய அணிக்கு கங்குலி அட்வைஸ்

ஏற்கனவே நடராஜ் கடந்து வந்த பாதையை பாருங்கள். இதுவே அவருக்கு வெற்றி தான். காயங்கள் அவரை தடுத்தாலும் நிச்சயம் அதிலிருந்து அவர் மீண்டு வருவார். இதேபோன்று தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்தும் வீரர்கள் வெளிவர வேண்டும் என்பதே தனது விருப்பம் என எல்.பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement