IND vs WI : ஸ்டம்பிலே படாத பந்தை அவுட் என நினைத்து வெளியேறிய வெ.இ துவக்க வீரர் – அம்பயரும் தடுக்கல (ஏன் தெரியுமா?)

Kyle-Mayers
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது டி20 போட்டியானது டிரினிடாட் நகரில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ராவ்மன் பவல் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது. பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரரான கையில் மேயர்ஸ் ஆட்டமிழந்தது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏனெனில் இந்த போட்டியில் முதல் 6 பந்துகளில் ஒரு ரன்னை மட்டுமே அடித்த அவர் ஏழாவது பந்தில் சாஹலிடம் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் அவர் ஆட்டமிழந்த விதம் ரிப்ளேவில் பார்க்கும் போது பந்து ஸ்டம்பை தாக்கவில்லை இருந்தாலும் அம்பயர் அவுட் என்று அறிவித்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : அறிமுக போட்டியிலேயே அபார கேட்ச் பிடித்து பேட்டிங்கில் அதிரடி காட்டிய திலக் வர்மா – ரெய்னாவின் அசத்தல் சாதனை சமன்

அதே வேளையில் கையில் மேயர்ஸும் டி.ஆர்.எஸ் எடுக்காததால் பந்து ஸ்டம்பில் படாமல் சென்று இருந்தாலும் அவர் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார். இது குறித்த புகைப்பட ஆதாரமும் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement