பந்துவீச சொன்ன கோலி. முடியவே முடியாது என மறுத்த ஜேமிசன் – அப்படி என்ன நடந்தது பயிற்சியில் ?

Jamieson
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசெனை 15 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது. கடந்த ஆண்டு நியூசிலாந்து தொடரில் அவர் இந்திய அணி வீரர்களை கதிகலங்க வைத்ததன் காரணமாக அவருக்கு மவுசு கூடியது. பல்வேறு அணிகள் அவரை வாங்குவதற்கு முயற்சி செய்தன ஆனால் இறுதியில் பெங்களூரு அணி அவரை 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அதிக விலைக்கு போனாலும் இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிக அற்புதமாகத் தன்னுடைய பங்களிப்பை வழங்கி வருகிறார். 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார், இந்த தொடரில் அவரது பவுலிங் ஆவரேஜ் 27 ஆகும்.

Jamieson-1

இந்நிலையில் வலை பயிற்சியின் போது நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவத்தை பெங்களூரு அணியின் வீரர் டேனியல் கிரிஸ்டியன் தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார். வலை பயிற்ச்சியில் ஐபிஎல் போட்டிக்கு பயன்படுத்தும் பந்தை விராட் கோலிக்கு ஜேமிசன் வீசி வந்துள்ளார். அப்பொழுது பேசிக்கொண்டே விராட் கோலி நீங்கள் டியுக்ஸ் பந்தில் மிக அற்புதமாக பந்துவீசுவீர்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் என்று பேச்சுவாக்கில் கேட்டுள்ளார்.

- Advertisement -

அதற்கு ஜேமிசன் ஆமாம் நான் அந்த பந்துகளில் அதிகமாக வந்து வீசி பழகி உள்ளேன். தற்பொழுது கூட எனது பையில் இரண்டு டியுக்ஸ் பந்துகள் இருக்கின்றன நான் அவற்றை இந்த ஐபிஎல் தொடர் முடிந்து நடக்க இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக கொண்டு வந்துள்ளேன். இங்கே கிடைக்கும் நேரங்களில் சிறிது பயிற்சியை நான் மேற்கொள்ளவே டியுக்ஸ் பந்துகளை கொண்டு வந்துள்ளேன் என்று பதிலுக்கு ஜேமிசன் கூறியுள்ளார்.

jamieson

ஜேமிசன் தன்னிடம் பந்துகள் இருக்கிறது எனக் கூறிய அடுத்த நொடியில் சரி எனக்கு அந்த பந்துகளில் சிறிது பந்து வீசுங்கள் நான் அதை எதிர் கொள்கிறேன் என்று நைசாக கோலி கேட்டுள்ளார். அதற்கு சுதாரித்துக்கொண்ட ஜேமிசன் நான் இப்பொழுது உங்களுக்கு பந்து வீச முடியாது என்று மறுத்துவிட்டார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன நிலையில், இப்பொழுது கோலிக்கு இவர் பந்து வீசினால் இவரது பலம் மற்றும் பலவீனங்களை கோலி அறிந்து கொள்வார். எனவேதான் முடியாது என ஜேமிசன் மறுத்துவிட்டார்.

Jamieson

இவ்வாறு நடந்த சம்பவத்தை சிரித்து கொண்டே கூறிய டேனியல் கிஸ்டியன், மேலும் தற்போது கடந்த ஆண்டுகளைவிட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிக பலம் வாய்ந்த அணியாக உள்ளது என்றும், அனைத்து வீரர்களும் மிகச் சிறப்பாக பங்களித்து வருகின்றனர் என்றும் கூறினார். மேலும் இந்த ஆண்டு நிச்சயமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement