போட்டி மோசமாக போகும்போது கைல் ஜேமிசன் லுக் விட்ட அந்த பெண் – யார் தெரியுமா ?

jamieson
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 31-ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 92 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியின் வீரர்கள் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக பெங்களூரு அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்றனர்.

RCBvsKKR

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின்போது பெங்களூர் அணி ஒரு கட்டத்தில் 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்த போது கேமரா பெங்களூரு அணியின் வீரர்கள் பக்கம் திரும்பியது. அப்போது வீரர்களின் வரிசையில் அமர்ந்திருந்த கையில் ஜேமிசன் பேடு கட்டிக்கொண்டு தயாராக இருந்தார்.

அணி மோசமான சூழ்நிலையில் இருக்கும் இந்த வேளையில் அவர் தந்து வலது புறமாக அமைந்திருந்த ஒரு பெண்ணை நோக்கி சிரித்தவாறு இருந்தார். இது குறித்த வீடியோ அப்போது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.

navnita 2

மேலும் இதனை கண்ட ரசிகர்கள் அணி இப்படி ஒரு மோசமான நிலையில் இருக்கையில் நீங்கள் செய்வது சரிதானா ? என்பது போல் அவரை கிண்டல் செய்து சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கையில் ஜேமிசன் புன்னகைத்த அந்த பெண் யார் ? என்ற விவரம் அதிக அளவில் தேடப்பட்டது.

navnita 1

அந்த வகையில் ஜேமிசன் பார்த்து சிரித்த அந்த பெண் வேறுயாருமில்லை. பெங்களூரு அணியின் மசாஜ் தெரபிஸ்ட் நவ்நீதா கௌதம் தான். கடந்த பல ஆண்டுகளாகவே பெங்களூரு அணியில் பணியாற்றி வரும் இவர் வீரர்களுக்கு அதிக உடல் சோர்வு ஏற்படும்போது அவர்களின் களைப்பை போக்க மசாஜ் செய்யும் ஒரு உதவியாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement