ஐபிஎல் விதியை மீறிய கிறிஸ் கெய்ல்…சிக்கலில் பஞ்சாப் அணி – காரணம் இதுதான் !

gayle
- Advertisement -

பொதுவாக மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் என்றாலே அவர்கள் எப்போதும் ஜாலியான சேட்டைகளை செய்து கொண்டுதான் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் அந்த அணியில் உள்ள வீரர் கிரிஸ் கெய்ல் செய்யும் குருபிற்கு அளாவிய இருப்பது இல்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு குறும்புத்தனமான செயலை செய்து கிரிக்கெட் விதியை மீறியுள்ளார் கெய்ல்.

gayle1

- Advertisement -

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியின் போது பீல்டிங் ஈடுபட்டிருந்த பஞ்சாப் அணியின் கீப்பர் ஒரு கட்டத்தில் மூன்றாவது நடுவர் எதோ ஒரு நோ பால் பந்தினை சரிபார்த்து கொண்டிருந்தார். அந்த இடைவேளையில் விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் டிரெஸ்ஸிங் ரூம் வரை சென்று வந்தார். கீப்பிங் கிளவுஸை கெய்ல் எடுத்து கையில் மாட்டிக் கொண்டு காமெடி செய்தார் . பின்னர் ராகுல் வந்தவுடன் கிளவுஸை அவரிடம் கொடுத்துவிட்டார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சிரித்துக்கொண்டிருந்தனர்.கிரிக்கெட் விதிமுறைப்படி இப்படி கீப்பரின் கிளவுஸை வேறு எந்த வீரரும் அணியக் கூடாது என்பது தான் விதி அப்படி அணியும் பட்சத்தில் அதற்கு பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் அபராத வழங்கப்படும். ஆனால் அப்படி எந்த ஒரு அபராதமும் கெய்ல் ஆடிவரும் பஞ்சாப் அணிக்கு அளிக்கப்படவில்லை.

ஆனால் கடந்த புதன்கிழமை அன்று சென்னை மற்றும் பெங்களூர் அணி ஆடிய போட்டியின் போது பந்து வீச தாமதம் செய்ததால் பெங்களூர் அணியின் கேப்டன் கோலிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது ஆனால் கேய்ல் இந்த செயலை நகிச்சுவைக்காக தான் செய்தார் என்பதை நடுவர்களும் அறிவார்கள் அதனால் அவருக்கு எந்த வித அபராதமும் விதிக்கப்படவில்லை.

Advertisement