ஐ.பி.எல் தொடரில் சொதப்பி ஆஸ்திரேலியாவில் பட்டையை கிளப்பும் மேக்ஸ்வெல் – விமர்சையாக கலாய்த்த பயிற்சியாளர்

Jaffer

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். அதேபோல் இரண்டாவது போட்டியில் 29 பந்துகளில் 63 ரன்கள் அடித்து துவம்சம் செய்தார்.

இந்த தொடர் துவங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிக்கொண்டிருந்தார். இவரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பெரிதாக அப்படி ஏதும் செய்யவில்லை. 11 போட்டிகளில் ஆடி வெரும் 108 ரன்கள் மட்டுமே எடுத்து வந்தார்.

மேக்ஸ்வெல் இதன் காரணமாக பஞ்சாப் அணி பல தோல்விகளையும் சந்தித்து ஐபிஎல் தொடரில் இப்படி மோசமாக ஆடி ரசிகர்களை நோகடிக்கும் கிளன் மேக்ஸ்வெல் திடீரென ஆஸ்திரேலியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் தொடரில் இந்திய அணிக்கு எதிராக அடித்து நொறுக்கி கொண்டிருக்கிறார்.

Maxwell

பல சிக்சர்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்து அளித்துக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆட்டத்தை பார்த்த பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் அவரை ஜாலியாக கலாய்த்திருக்கிறார்.

- Advertisement -

‘இது ஒரு குற்றம்’ என்று வேடிக்கையான ஒரு மீமை பகிர்ந்திருந்தார். வாசிம் ஜாபர் இது ரசிகர்களிடையே தற்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. பஞ்சாப் அணிக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கும். ஏனெனில் 2014 ஆம் ஆண்டு கடைசியாக இவர் 500 ரன் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அந்த அணியால் தக்க வைக்கப்படும் அந்த அறிக்கையை பெரிதாக ஏதும் செய்யாமல் இருந்து வருகிறார் கிளன் மேக்ஸ்வெல்.