ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்றுமுதல் ஒரு வருடம் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது.இதன் பிரதிபலிப்பாக உடனடியாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா “ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் தடைசெய்யப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய வீரர்கள் இந்த ஐபிஎல் சீசனில் விளையாட மாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் களமிறக்கப்படுவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இதனால் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் இந்த ஐபிஎல்-இல் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இவர்களுக்கு பதிலாக ஹைதராபாத் அணி ஷிகர் தவானையும், ராஜஸ்தான் அணி ரஹானேவையும் கேப்டன்களாக அறிவித்துள்ளது.
இருப்பினும் தற்போது ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வுசெய்ய தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத் அணி டேவிட் வார்னருக்கு பதிலாக இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான குசல் பெரேரா விடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
IPL team SunRisers Hyderabad has approached Kusal Janith Perera as a possible replacement for Banned David Warner, deal yet to be finalised
— Azzam Ameen (@AzzamAmeen) March 28, 2018
ஓரிரு நாட்களில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விரைவில் ஹைதராபாத் அணியுடன் குசல் பெரேரா இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தென்ஆப்பிரிக்க தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு அடி மேல் அடி விழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.