மைதானத்தில் ரசிகர்கள் முன் பைக் ஓட்டி சீன் காட்ட நினைத்து கீழே விழுந்த இலங்கை வீரர் – வைரல் வீடியோ

Kusal-Mendis
- Advertisement -

இலங்கை அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இலங்கை அணியின் வீரரான குஷால் மென்டிஸ் பைக் ஓடி கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

கொழும்புவில் நடந்த இந்த போட்டிக்கு பின் குஷால் மென்டிஸ் தொடர் நாயகனுக்கு வழங்கப்பட்ட பைக்கை எடுத்துக்கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் மைதானத்தை வலம் வந்தார். அவ்வாறு அவர் மைதானத்தை சுற்றி வரும்போது நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். அப்பொழுது மைதானத்தில் உள்ள பாதுகாவலர்கள் அவரை வந்து மீட்டனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கீழே விழுந்து சில நிமிடங்கள் வரை அவர் எழுந்திருக்காமல் இருந்ததால் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சிலர் இந்த வீடியோவை நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement