பஞ்சாப் அணிக்கு ராகுலை கேப்டனாக ஆக்கியதற்கு இதுவே காரணம் – ரகசியத்தை உடைத்த கும்ப்ளே

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஏற்கனவே கேப்டனாக செயல்பட்டு வந்த தமிழக வீரரான அஸ்வினை பஞ்சாப் அணி நிர்வாகம் கழட்டிவிட்டு விட்டது. இதனை தொடர்ந்து தற்போது அஸ்வின் டெல்லி அணியில் இடம்பெற்று விளையாட இருக்கிறார்.

Rahul 1

இந்நிலையில் ராகுலை எதற்காக பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமித்தோம் என்பது குறித்து அணியின் இயக்குனர் கும்ப்ளே கூறுகையில் : பஞ்சாப் அணியை வலுவாக கட்டமைக்க இந்திய வீரர்களில் ஒருவரை கேப்டனாக தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் என்று நான் கருதினேன். அணியில் உள்ள வீரர்களில் சிறந்த நபர் யார் என்று பார்க்கும் போது ராகுல் தான் அதற்கு சரியான நபர் என்று தீர்மானித்தோம்.

மேலும் கடந்த இரண்டு வருடமாக பஞ்சாப் அணிக்காக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் மற்ற வீரர்களிடையே அவர் நல்ல பெயரை எடுத்து உள்ளார். எனவே அவரை கிங்ஸ் லெவன் அணியின் கண்ணோட்டத்தில் இருந்து மட்டும் பார்க்காமல் சர்வதேச அளவிலும் அவரது தனிப்பட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டும் இந்த கேப்டன் பதவியை அவருக்கு வழங்கியுள்ளோம்.

Rahul

மேலும் அவர் கேப்டன் பதவியை ஏற்க இது சிறப்பான தருணம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்த பதவியில் அவரை ஒரு வீரராக உச்சத்தைத் தொடுவதற்கும், ஒரு தலைவராக ஆட்டத்தை அணுகுவதற்கும் உதவியாக இருக்கும் என்பதால் இந்த கேப்டன் பதவியை இந்த ஆண்டு அவரிடம் கொடுத்துள்ளோம் என்று கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -