இது பஸ்பால் இல்ல ஆணவம்.. 15 நிமிடத்துக்கு முன் திமிரை காட்டிய இங்கிலாந்தை.. விளாசிய சங்ககாரா

Kumar Sangakkara
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 3வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 10ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய இந்தியாவும் சரியாக 387 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74, ஜடேஜா 72 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட்டை 12 ரன்களில் அவுட்டாக்கிய சிராஜ் அடுத்து வந்த ஓலி போப்பையும் 4 ரன்னில் காலி செய்தார்.

- Advertisement -

பஸ்பால் இல்லை ஆணவம்:

மறுபுறும் நிதானத்தைக் காட்டிய ஜாக் கிராவ்லி 22 ரன்களில் நிதிஷ் ரெட்டி வேகத்தில் அவுட்டானார். அதனால் 87/4 என தடுமாறிய இங்கிலாந்துக்கு ஜோ ரூட் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் பஸ்பால் ஆட்டத்தை துவங்கினார். குறிப்பாக ஆகாஷ் தீப் விக்கெட் கீப்பரை அருகில் வைத்து கொஞ்சம் மெதுவாக வீசினார்.

அந்த ஓவரில் ஸ்கூப் ஷாட் வாயிலாக அடுத்தடுத்த பவுண்டரிகளை அடித்த ப்ரூக் அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தார். அதற்காக மனம் தளராத ஆகாஷ் தீப் அடுத்த ஓவரில் தொடர்ந்து ஸ்டம்ப்பை நோக்கி குறி பார்த்து பவுலிங் செய்தார். அதில் ஒரு பந்தை ஸ்வீப் அடிக்க முயற்சித்த ஹாரி ப்ரூக் தவற விட்டு மிடில் ஸ்டம்ப்பில் க்ளீன் போல்ட்டானார். அதை நேரலையில் பார்த்த ஜாம்பவான் குமார் சங்ககாரா சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல திமிரை காட்டிய இங்கிலாந்தின் ப்ரூக் பற்றி வர்ணித்தது பின்வருமாறு.

- Advertisement -

சங்ககாரா விளாசல்:

“இந்தியா ஃபைன் லெக்கை இன்னும் ஃபைனாக வைத்தார்களா? என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் ப்ரூக் ஸ்கொயர் பகுதியில் அடிக்க விரும்பினார். ஆனால் அவர் அடித்தது ஸ்கூல் கிடையாது, ஸ்வீப் ஷாட். பொதுவாக அது ஸ்பின்னருக்கு எதிராக அடிக்கக்கூடியது. உணவு இடைவெளிக்கு 15 நிமிடங்கள் இருக்கையில் இந்தியாவுக்கு நீங்கள் பதிலடியைக் கொடுக்க துவங்கியுள்ளீர்கள். அப்படிப்பட்ட சமயத்தில் இது புத்திசாலித்தனமான ஆட்டம் கிடையாது”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பை கேட்டேன்.. ஆனா செலக்டர்ஸ் இதை கூட தரல.. ரஹானே ஆதங்கம்

“ஃபிளிக் அடிக்கத் தேவையான இடைவெளியை இந்தியா கொடுத்தும் ப்ரூக் ஸ்கூப் செய்தார். இது அதீத தன்னம்பிக்கை கிடையாது, பஸ்பாலும் கிடையாது, இது கொஞ்சம் ஆணவம் என்று நினைக்கிறேன். நீங்கள் பதிலடி கொடுக்கும் போது இது மிகப்பெரிய தவறு” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தை விரைவாக சுருட்ட இந்தியா முயற்சித்து வருகிறது.

Advertisement