இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பை கேட்டேன்.. ஆனா செலக்டர்ஸ் இதை கூட தரல.. ரஹானே ஆதங்கம்

Ajinkya Rahane
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஜிங்கிய ரஹானே இந்தியாவுக்காக 2012 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி கணிசமாக அசத்தினார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாடிய அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2014 லண்டன் லார்ட்ஸ் போட்டியில் சதத்தை அடித்து தோனி தலைமையில் இங்கிலாந்தில் சரித்திர வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

அதை விட 2020/21 ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அப்போது நாடு திரும்பிய விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் சதத்தை அடித்து இந்தியாவை கம்பேக் கொடுக்க வைத்தார். அவருடைய தலைமையில் இளம் வீரர்களுடன் காபா கோட்டையை தகர்த்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் கோப்பையை வென்றது.

- Advertisement -

பதில் கூட வரல:

ஆனால் அதன் பின் கொஞ்சம் தடுமாற்றமாக செயல்பட்ட அவரை இந்திய அணி கழற்றி விட்டது. அதற்காக அசராமல் உள்ளூர் தொடரில் போராடிய ரஹானே 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அமர்க்களமாக விளையாடினார். அதன் காரணமாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் கம்பேக் கொடுத்து சிறப்பாக விளையாடிய அவர் அடுத்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சொதப்பினார்.

அதனால் அவரை நிரந்தரமாக கழற்றி விட்டுள்ள பிசிசிஐ இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. எனவே அவருடைய இந்திய கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்காக வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, வாய்ப்பு கேட்கும் தமக்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவினர் பதில் கூட கொடுக்கவில்லை என்று ரஹானே ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரஹானே ஆதங்கம்:

இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்பும் நான் அதற்காக ஆர்வத்துடன் இருக்கிறேன். இங்கிலாந்தில் இன்னும் சில நாட்கள் இருக்க உள்ள நான் பயிற்சி உடைகள் மற்றும் உபகரணங்களை வைத்துள்ளேன். அப்போது தான் விரைவில் எங்கள் ஊரில் துவங்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடப் பயிற்சிகளை எடுத்து என்னால் ஃபிட்டாக இருக்க முடியும்”

இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து வீரர்களின் இந்த சண்டைக்கு ஐபிஎல் தான் காரணம்.. கவாஸ்கர் வித்தியாசமான கருத்து

“என்னைப் பொறுத்த வரை என்னால் கட்டுப்படுத்த முடிந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் தேர்வாளர்களிடம் பேசுவதற்கு நான் முயற்சித்தேன். ஆனால் எந்த பதிலும் கிடைக்கல்லை. இருப்பினும் என்னால் அதையெல்லாம் கட்டுப்படுத்த முடியாது. தொடர்ந்து கிரிக்கெட்டில் மகிழ்ச்சியுடன் விளையாடி என்னுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுக்க வேண்டும் என்பதே என்னால் முடித்ததாகும்” எனக் கூறினார்.

Advertisement