ஐ.சி.சி யின் புதிய தலைவர் பதவிக்கு இந்திய ஜாம்பவானான இவரே தகுதியானவர் – சங்கக்காரா உறுதி

Sanga

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்த இந்தியாவின் ஷசாங் மனோகர் தனது பதவிக்காலம் முடிந்து பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை ஹாங்காங்கின் இம்ரான் கவாஜா இடைக்கால தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் புதிய தலைவருக்கான போட்டியில் உலகின் முன்னணி கிரிக்கெட் நிர்வாகிகள் வரிசை கட்டி இருக்கிறார்.

Manohar

இந்த போட்டியில் இங்கிலாந்தின் கிரிக்கெட் வாரிய சேர்மன் காலின் கிராவ்ஸ் வரிசையில் முதலாவதாக இருக்கிறார். அதேசமயம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கங்குலியும் இந்த போட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சவுரவ் கங்குலியை ஐசிசி தலைவராக மாற்றி அழகு பார்க்க பல நாட்டு முன்னாள் வீரர்களும் இந்நாள் வீரர்களும் ஆசையாக இருக்கின்றனர்.

ஏற்கனவே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குனர் மற்றும் முன்னாள் வீரர் கிரேம் ஸ்மித் இதனை முன்மொழிந்திருந்தார். இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில்…

Ganguly

அவரது தீவிரமான ரசிகன் நான். ஐசிசி தலைவர் பதவிக்கு சௌரவ் கங்குலி மிகவும் பொருத்தமானவராக இருப்பார். அவர் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல அவர் கிரிக்கெட் அறிவு மிக்கவர். மிகவும் புத்திசாலி. ஐசிசி தலைவர் பொறுப்புக்கு வரும் ஒருவருக்கு பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும்.

- Advertisement -

Ganguly

இந்திய, இலங்கை, ஆஸ்திரேலிய வீரர் என்ற எண்ணமில்லாமல் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். இவை அனைத்தும் அவருக்கு இருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே கங்குலியை நான் பார்த்து வருகிறேன். உலக அளவில் கிரிக்கெட் வீரர்களுடன் உறவவை வளர்த்தவர். இதன் காரணமாக இவர்தான் ஐசிசி தலைவர் பொறுப்பிற்கு சரியாக இருப்பார் என்று கூறியுள்ளார் குமார் சங்ககாரா..