சங்கக்கார வெளியிட்ட தனது கணவு அணி..! சச்சின் இடம்பெறவில்லை..! இந்திய வீரர் யார் தெரியுமா..?

- Advertisement -

முன்னாள் இலங்கை அணியின் வீரரும், அந்த அணியின் கேப்டனாகவும் இருந்த அதிரடி வீரர் சங்ககாரா தனது கனவு 11 அணியை அறிவித்துள்ளார். அந்த அணியின் 4 ஆஸ்திரேலிய வீரர்களும், 3 இலங்கை வீரர்களும் இடம் பெற்றுள்ளார். ஆனால் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று கருதப்படும் சச்சினின் பெயர் அவர் தேர்தெடுத்துள்ள 11 வீரர்களில் இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.
kumar

முன்னாள் இலங்கை வீரரான சங்ககாரா சச்சின் அளவிற்கு சாதனைகளை படைக்கவில்லை என்றாலும், அவருக்கு இணையான ஓரளவிற்கு புகழை கிரிக்கெட் உலகில் பெற்றவர். சமீபத்தில் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய இனைய தளம் ஒன்று, நடத்திய ஆய்வில் சங்கக்கார அதிக ரசிகர்களை கொண்ட வீரர்களில் சச்சினை விட அதிக வாக்குகள் பெற்று முந்தினர்.

- Advertisement -

சச்சினை விட சங்ககாரா சிறந்த வீரரா என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. ஆனால் எந்த விதத்திலும் சச்சினை விட சங்கக்கார குறைந்தவர் அல்ல. இதுவரை 404 போட்டிகளில் விளையாடியுள்ள சங்கக்காரா 14,234 ரன்களை குவித்துள்ளார், 25 சதங்களும் அடங்கும்.மேலும் அவரது அவரது பேட்டிங் சராசரி 41.98.

சமீபத்தில் சங்கக்காரா தான் தேர்ந்தெடுத்த தன்னுடைய கனவு 11 அணியை அறிவித்த வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. லார்ட்ஸ் மைதானம் வெளியிட்ட இந்த வீடியோவில் சங்கக்கார அவரது அணியில் சச்சினின் பெயரை குறிப்பிடவில்லை. மேலும் அவர் வெளியிட்டுள்ள அணியின் விவரம் இதோ
dravid

* அரவிந்த டீ சில்வா – கேப்டன் (இலங்கை )

* ராகுல் டிராவிட் (இந்தியா)

- Advertisement -

* மேத்தீவ் ஹெய்டன் (ஆஸ்திரேலிய)

* பிரைன் லாரா (மேற்கிந்திய தீவு)

- Advertisement -

* ரிக்கி பாயின்டிங் (ஆஸ்திரேலியா)

* ஜாக்ஸ் கள்ளிஸ் (தென்னாபிரிக்கா )

- Advertisement -

* ஆடம் கில்க்ரிஸ்ட் (ஆஸ்திரேலியா)

* ஷேன் வார்னே (ஆஸ்திரேலிய)

* முத்தையா முரளிதரன் (இலங்கை )

* வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)

* சமிந்தா வாஸ் இலங்கை )

Advertisement