
லண்டன் ஓவல் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடைசி நாள் ஆட்டத்துடன் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை சமன் செய்து அசத்தியது.
அந்த வகையில் நடைபெற்ற இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 224 ரன்களை குவித்தது. பின்னர் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 247 ரன்களை குவித்தது. அதனால் 23 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது :
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 396 ரன்களை குவித்தது. அதனால் 373 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த பெரிய இலக்கினை துரத்திய இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக இலக்கை நோக்கி நகர்ந்தாலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரது அபாரமான செயல்பாட்டின் காரணமாக அந்த அணி 367 ரன்களுக்கு சுருண்டது.
அதன் காரணமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த போட்டியில் திரில் வெற்றியை பெற்றிருந்தது. இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி ஒருவேளை தோல்வியை சந்தித்து இருந்தால் இந்த தொடரை இழந்திருக்கும் அபாயம் இருந்தது. ஆனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்ததோடு இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தும் தங்களது கௌரவத்தை காத்துக் கொண்டது. இப்படி ஒரு மிகச் சிறப்பான போட்டி ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்திருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது களத்தில் அம்பயராக செயல்பட்டிருந்த இலங்கை சேர்ந்த குமார் தர்மசேனாவும் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் இந்த ஓவல் டெஸ்ட் குறித்த ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் குமார் தர்மசேனா பகிர்ந்த அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :
இதையும் படிங்க : அவரு ஆடியிருந்தா இங்கிலாந்து தான் ஜெயிச்சிருக்கும்.. தோற்ற பின்னரும் கதறும் மைக்கல் வாகன் – விவரம் இதோ
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு தலை சிறந்த டெஸ்ட் போட்டியை நான் மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு இந்த போட்டியின் மூலம் கிடைத்தது. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியபடியே இப்படி ஒரு விறுவிறுப்பான போட்டி எப்போதாவது ஒருமுறைதான் கிடைக்கும் என்பதனால் நிச்சயம் இந்த போட்டியை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.