இலங்கை மியூசியத்துக்கு விராட் கோலி கொடுத்த பரிசு.. திறமை, மனிதாபிமானம் பற்றி அம்பயர் தர்மசேனா பதிவு

Kumar Dharmasena
- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கையை நட்சத்திரம் விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் இந்தியாவுக்காக சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து இப்போது வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடிய அவர் 27000+ ரன்கள் 82 சதங்கள் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

2016 – 2021 வரை கேப்டனாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்த அவர் 40 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான ஆசியக் கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். அவருடைய தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

- Advertisement -

இலங்கையில் கோலியின் நினைவுப்பரிசு:

மேலும் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழும் விராட் கோலி நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். முன்னதாக களத்தில் எதிரணிகளிடம் ஆக்ரோஷமாக செயல்படக்கூடிய விராட் கோலி களத்துக்கு வெளியே அன்புடன் நடந்து கொள்ளக்கூடியவர். அந்த வகையில் தாம் கேட்டதற்காக விராட் கோலி கையொப்பமிட்ட ஜெர்ஸியை பரிசாக கொடுத்துள்ளதாக இலங்கையின் அம்பயர் குமார் தர்மசேனா தெரிவித்துள்ளார்.

அதை இலங்கையில் இருக்கும் அயகமா நகரில் உள்ள பின்டானா கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் நினைவு பரிசாக வைத்துள்ளதாகவும் தர்மசேனா கூறியுள்ளார். இது பற்றி விராட் கோலியின் இந்திய டெஸ்ட் ஜெர்ஸியை கண்ணாடி பெட்டிக்குள் வைத்துள்ள புகைப்படத்துடன் சேர்த்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “விராட் கோலி களத்தில் விளையாடும் டி ஷர்ட் அயகமாவில் உள்ள பின்டானா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது”

- Advertisement -

தர்மசேனா நெகிழ்ச்சி:

“விராட் கோலியின் திறமைகளை மிகவும் நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் அதிர்ஷ்டசாலி. அதை மற்றவர்கள் யாரும் அவ்வளவு நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டார்கள். அனைத்தையும் தாண்டி விராட் கோலி சிறந்த மனிதாபிமானம் மிக்கவர். அவரை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: துலீப் கோப்பை: 197 ரன்ஸ்.. ஜெகதீசன் அசத்தலில் வடக்கை சாய்த்த தெற்கு அணி.. ஃபைனலில் மோதுவது யார்?

இதே போல பாகிஸ்தானை சேர்ந்த பிரபல அம்பயர் அலீம் தார் கேட்டுக் கொண்டதற்காக ஏற்கனவே விராட் கோலி புகைப்படம் மற்றும் ஜெர்ஸிகளை பரிசாக கொடுத்துள்ளார். அந்த வகையில் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் விராட் கோலியை விரும்புபவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக வெளிநாட்டு அம்பயர்கள் விரும்பும் அளவுக்கு விராட் கோலி திறமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement