தப்பு தப்பா அம்பயர் பண்ணும் இவரையா இறுதிப்போட்டிக்கு போட்டீங்க – சர்ச்சையான அம்பயர் நியமனம்

Dharmasena
- Advertisement -

உலக கோப்பை தொடர் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று முடிந்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

தற்போது நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி இன்று நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெல்லும் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான நடுவர்களை ஐசிசி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி இந்த இறுதி போட்டிக்கான நடுவர்களாக இலங்கை அணியின் குமார் தர்மசேனா மற்றும் தென் ஆப்பிரிக்க நடுவரான எரஸ்மஸ் ஆகியோர் மைதான நடுவர்களாகவும், ராட் டக்கர் மூன்றாவது அம்பயராகவும் செயல்படுவார்கள் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

Roy

குமார் தர்மசேனா ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதி அரையிறுதியில் ராய்க்கு தவறான அவர் கொடுத்த அம்பயர் என்ற சர்ச்சை எழுந்தது. இந்த சூழ்நிலையில் அவரை மீண்டும் பைனல் போட்டிக்கு நடுவராக ஐசிசி நியமித்ததால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நடுவர்கள் தேர்வு குறித்து ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement