நான் ஹாட்ரிக் சாதனை படைக்க எனது இந்த ஐடியா தான் காரணம் – குல்தீப் யாதவ் பேட்டி

kuldeep-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர்.

Kuldeep-1

- Advertisement -

அதன்பின்னர் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. ஆட்டநாயகன் விருது 159 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி முடிந்து தனது ஹாட்ரிக் குறித்து பேசிய குல்தீப் யாதவ் கூறியதாவது : ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த நாள் எனக்கு ஒரு முழுமையான திருப்தியான நாளாக அமைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகளே இல்லை.

கடந்த 4-5 மாதங்களாக நான் கடினமான சூழ்நிலையை கடந்து வந்துள்ளேன். அதன் பிறகு கடினமாக உழைக்க ஆரம்பித்து நன்றாக பந்து வீச வேண்டும் எனது என்று தயாரானேன். இந்த போட்டியில் எனது பந்துவீச்சு திருப்தியாக இருக்கிறது. இந்த மைதானத்தில் அதிக அளவு டர்ன் இல்லை என்றாலும் 380 ரன்கள் இலக்கு என்பதால் அதை வைத்து சிறப்பாக பந்து வீச முடிந்தது. என்னுடைய வேகத்தை நான் மாற்றி மாற்றி இந்த மைதானத்தில் வீசினேன்.

kuldeep

மேலும் ஹாட்ரிக் பந்தினை வீசும்போது சைனா மேன் வீசலாமா ? அல்லது ஒரு ஸ்லிப்பை எக்ஸ்ட்ரா வைத்து வெளியில் வீசலாமா என்று நினைத்தேன். அதன்படி எக்ஸ்ட்ரா ஒரு ஸ்லிப்பை நிற்கவைத்து பந்தை வெளியில் வீசினேன். எனது இந்த யோசனையால் எனக்கு ஹாட்ரிக் விக்கெட் கிடைத்தது என்று உறுதி குல்தீப் யாதவ் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement