தோனி இந்த இடத்தில் இல்லை எனபது ரொம்ப கஷ்டமாக இருக்கு – மனம் திறந்து பேசிய குல்தீப் யாதவ்

kuldeep1
- Advertisement -

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு பிறகு தோனியை களத்தில் காண முடியவில்லை. அதற்கு பிறகு சிறு ஓய்வு வேண்டும் என தற்போது கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு மேலாக கிரிக்கெட் ஆடுகளத்திற்கு வெளியே இருக்கிறார். இதன் காரணமாக பிசிசிஐ அவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

Kuldeep-1

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடர் இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ளது. ஐபிஎல் தொடருக்காக சென்னை மைதானத்தில் ரசிகர்களின் கரகோஷத்துடன் தொடர் பயிற்சி செய்து வருகிறார்.
எப்படியாவது தனக்கு விருப்பமான வீரரை களத்தில் பார்த்துவிட வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணம். அதேபோல் இந்திய அணியும் தோனியை மிஸ் செய்யாமல் இல்லை.

கீப்பராக கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருந்தாலும் தோனி கேப்டன் விராட் கோலி முதல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வரை அனைவரும் மிஸ் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இதுகுறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியதாவது :

கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நன்றாக கீப்பிங் செய்கின்றனர். பேட்டிங்கும் நன்றாகத்தான் ஆடுகிறார்கள். ஆனால் தோனி ஆடுகளத்தில் இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது .

அவரது அனுபவம் எங்களுக்கு பல முறை கை கொடுத்துள்ளது . இந்திய அணிக்கு அவரது அனுபவத்தின் மூலம் நிறைய செய்திருக்கிறார். இந்திய அணி அவரை மிஸ் செய்கிறது என்று கூறியுள்ளார் சொல்லி குல்தீப் யாதவ்.

Advertisement