
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்குகிறது. சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அந்த மைதானத்தில் இந்தியாவுக்காக குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் செயல்பட்டார். அப்போது இங்கிலாந்து மண்ணில் அசத்துவதற்கான நுணுக்கங்களை பீட்டர்சன் தமக்கு சொன்னதாக குல்தீப் யாதவ் கூறியுள்ளார். மேலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவுட் செய்வதற்கான திட்டங்களை பீட்டர்சன் சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவுக்காக அசத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கெவின் பீட்டர்சன் எங்களுடைய டெல்லி அணியில் ஒரு அங்கமாக இருந்தார். அங்கே இங்கிலாந்து சுற்றுப்பயணம் பற்றி அவர் எனக்கு நிறைய உள்ளீடுகளை வழங்கினார். ஃபீல்டிங் இடங்கள், பிட்ச் மற்றும் பேட்ஸ்மேன்கள் பற்றி அவரிடம் சிலவற்றை தெரிவித்துள்ளார்”
“அவர் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை பற்றியும் சொன்னார். இங்கிலாந்தில் அசத்துவதற்கு தேவையான மனநிலைப் பற்றியும் பீட்டர்சன் பேசினார். பொதுவாக ஸ்பின்னர்கள் தடுப்பாட்டத்தை விளையாடும் எண்ணத்துடன் இங்கிலாந்துக்கு வருவார்கள் என்று பீட்டர்சன் கூறினார். இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுப்பார்கள, ஸ்பின்னர்கள் அவர்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்று அனைவரும் நினைப்பார்கள் என அவர் கூறினார்”
“ஆனால் அப்படி நினைக்காமல் அட்டாக் செய்யும் ஃபீல்டிங்கை வைத்து விக்கெட்டை எடுக்கும் நோக்கத்துடன் 15 – 20 ஓவர்களை எடுக்க வேண்டும் என்று பீட்டர்சன் கூறினார். விக்கெட்டுகளை எடுக்காவிட்டால் இங்கிலாந்தில் நீங்கள் விளையாடுவதை நியாயப்படுத்த முடியாது. விக்கெட்டுகள் எடுக்காமல் போனால் இங்கே விளையாட நீங்கள் தகுதியானவர்கள் என்று நான் நினைக்கவில்லை”
இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் மட்டுமல்ல மேலும் ஒரு ஸ்டார் பிளேயரையும் வெளியேற்ற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் – விவரம் இதோ
“எங்கே விளையாடினாலும் நான் விக்கெட்டை எடுக்க பந்தை சுழற்றி காற்றில் திருப்ப வேண்டும்” என்று கூறினார். இதை அடுத்து 2வது போட்டியில் யாதவ் விளையாடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் சந்தித்த தோல்வியால் சர்துள் தாக்கூர் கழற்றி விடப்பட்ட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.