அதை பாத்துட்டோம்.. அதே மாதிரி சர்பராஸ் இதை செஞ்சா.. இந்தியாவை ஜெயிக்க வைக்க முடியும்.. குல்தீப் பேட்டி

Kuldeep yadav
- Advertisement -

பெங்களூருவில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை சந்தித்தது. அதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து டேவோன் கான்வே 91, ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் எடுத்த உதவியுடன் 402 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து விளையாடும் இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 231-3 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. ஜெய்ஸ்வால் 35, கேப்டன் ரோஹித் 52, விராட் கோலி 70 ரன்களில் போராடி அவுட்டான நிலையில் களத்தில் சர்பராஸ் கான் 70* ரன்களுடன் போராடி வருகிறார். தற்சமயத்தில் இந்தியா 125 ரன்கள் பின்தங்கியுள்ள காரணத்தால் தோல்வியை தவிர்த்தால் போதும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

- Advertisement -

சர்பராஸ் அசத்துவாரா:

இந்நிலையில் கடந்த வாரம் இராணி கோப்பை ஃபைனலில் சர்பராஸ் கான் 222* ரன்கள் குவித்து மும்பையை வெற்றி பெற வைத்ததாக குல்தீப் யாதவ் கூறியுள்ளார். அதே போல இப்போட்டியிலும் சர்பராஸ் பெரிய ரன்கள் குவித்து 150 – 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இந்தியாவை எங்களால் வெற்றி பெற வைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏனெனில் பிட்ச் 5வது நாளில் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதை பார்த்து தெரிந்து கொண்டதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் பந்து வீசும் போதே பிட்ச் ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் உதவி செய்தது. எனவே ஐந்தாவது நாளில் அது இன்னும் அதிகமாக சுழலும் என்று நம்புகிறேன். ஆனால் அதற்கு முன் எங்களுக்கு கட்டுப்படுத்த நல்ல இலக்கு வேண்டும். எங்களுடைய பவுலிங் அட்டாக் காரணமாக நாங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இலக்கை நிர்ணயிக்கும் லட்சியத்தை கொண்டுள்ளோம்”

- Advertisement -

இந்தியா வெல்லுமா:

“தற்சமயத்தில் எவ்வளவு இலக்கு நிர்ணயிக்க முடியும் என்று கணிக்க முடியாது. இருப்பினும் எங்களிடம் இன்னும் நிறைய பேட்டிங் இருக்கிறது. இராணி கோப்பையில் சர்பராஸ் கான் 200 ரன்கள் அடித்ததை நாங்கள் பார்த்தோம். இங்கேயும் அவர் மற்றுமொரு இரட்டை சதம் அடிப்பார் என்று நம்புகிறோம். நன்றாக விளையாடுவதால் ரன்கள் வரும் வரை அவருடைய டெக்னிக்கில் எந்த பிரச்சனையும் கிடையாது”

இதையும் படிங்க: 46க்கு அவுட் பரவால்ல.. இப்போவும் கெட்டுப்போகல.. 4வது நாளில் இதை செஞ்சா இந்தியா ஜெய்க்கும்.. லக்ஷ்மன் பேட்டி

“சொல்லப்போனால் நியூசிலாந்து ஸ்பின்னர்களை அட்டாக் செய்யும் அவர் அவர்களை செட்டிலாக விளையாடவில்லை. நியூசிலாந்து இடது கை ஸ்பின்னர்களை சர்பராஸ் அட்டாக் செய்த காரணத்தாலேயே அவர்கள் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு வந்தார்கள். அவர் உண்மையான பேட்ஸ்மேன்” என்று கூறினார். அந்த வகையில் இந்திய அணி முடிந்தளவுக்கு இப்போட்டியில் வெற்றிக்காக போராட தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement