தெ.ஆ தொடர் முடிஞ்சாச்சி. அடுத்து என்னோட டார்கெட் அந்த தொடர் தான் – ஆட்டநாயகன் குல்தீப் யாதவ் பேட்டி

Kuldeep-Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்களை மட்டுமே குவித்தது.

David-Miller

- Advertisement -

பின்னர் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 105 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதுமட்டும் இன்றி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் அசத்தலாக செயல்பட்ட குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 4.1 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் ஒரு மெய்டன் உட்பட 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஏற்கனவே இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருந்து வந்த குல்தீப் யாதவ் தொடர்ச்சியான மோசமான பந்துவீச்சு காரணமாக இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Kuldeep Yadav 1

அதன் பிறகு மீண்டும் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் இந்த இறுதிப்போட்டியில் பெற்ற ஆட்டநாயகன் விருது பற்றி கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த மைதானம் நான் பந்து வீசுவதற்கு மிகவும் சவுகரியமாக இருந்தது. நான் இந்த போட்டியின் முடிவு குறித்தோ அல்லது வெற்றி தோல்வி குறித்தோ எதையும் யோசிக்கவில்லை. என்னுடைய லைன் மற்றும் லென்த்தில் மட்டும் கவனம் செலுத்தி ரிதம் மாறாமல் பந்து வீசவேண்டும் என்பதை மட்டுமே யோசித்து பந்து வீசினேன்.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் 2.0 இப்போது தான் ஆரம்பம், இனிமேல் ஆட்டம் அமர்க்களம் தான்- தமிழக வீரர் பாராட்டு

அந்த வகையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் மிகச் சிறப்பாக வீசி உள்ளேன். அடுத்தது என்னுடைய டார்கெட் சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக செயல்படுவது மட்டும்தான் என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement