- Advertisement -
ஐ.பி.எல்

சூப்பர் ஓவரில் இவங்களுக்கு எதிராக பந்துவீசுவது கடினம் – 3 இந்திய வீரர்களை குறிப்பிட்ட குல்தீப் யாதவ்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் எந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் நீங்கள் சூப்பர் ஓவர் வீசும் போது ஆடக்கூடாது என்று நினைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குல்தீப் யாதவ் கூறுகையில் : மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் சுழற்பந்து வீச்சாளர்களை நன்றாக ஆடக்கூடியவர்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக எங்களது இருவருக்கும் நல்ல பழக்கம் உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களை அவர் அருமையாக ஆடுவார். மேலும் எனது பந்துவீச்சை நன்றாக ஆடக்கூடியயவர் அவர்.அதேபோல் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருமே நன்றாக ஆடக்கூடியவர்கள்.

அவர்களுக்கு பந்து வீசுவது சற்று கடினம் தான் . அதுவும் சூப்பர் ஓவரில் இவர்களுக்கு பந்து வீசுவது மிகக்கடினம் என்று கூறியுள்ளார் குல்தீவ் யாதவ். ஆனால் உலகின் சிறந்த பினிஷர் என்ற பெயர் பெற்ற தோனியையோ அல்லது மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று பெயர் பெற்ற கோலியின் பெயரையோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை தொடரில் சொதப்பியதான் காரணமாக தற்போது வரை மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க திணறி வருகிறார் குல்தீப். தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி இந்திய அணியில் இடம் பெற கடுமையாக உழைத்து வருகிறார்.

- Advertisement -
Published by