ஷேன் வார்னே கூறிய அந்த எனக்கு நம்பிக்கை ஊட்டின. அவரே எனது ரோல் மாடல் – குல்தீப் யாதவ் உருக்கம்

Kuldeep
- Advertisement -

இந்திய அணியின் இளம் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த குல்தீப் யாதவ் இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தார். தோனி இருக்கும் வரை தனது பார்மின் உச்சத்தில் இருந்த அவர் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு அதன்பின்பு தொடர்ச்சியாக வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு குல்தீப் யாதவின் கிரிக்கெட் கரியரும் முடிவுக்கு வந்தது என்று பேசும் அளவிற்கு அவரது செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது.

Kuldeep-1

- Advertisement -

ஆனால் தான் மீண்டும் வலுவான கம்பேக் கொடுப்பேன் என்று கூறிய குல்தீப் யாதவ் கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு இருந்தாலும் இந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது நாளை துவங்க உள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி தற்போது அணியில் இடம் பிடித்திருக்கும் குல்தீப் யாதவ் இழந்த தனது பார்மை மீட்டெடுக்க கடுமையாக முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளைய போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறுவாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில் அதற்கு முன்னதாகவே தற்போது தனது சர்வதேச கிரிக்கெட் கரியரில் தான் சந்தித்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

Kuldeep Yadhav vs KKR 2.jpeg

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் உடனான பிணைப்பு குறித்தும் சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஷேன் வார்னே எப்பொழுதும் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்துள்ளார். நான் கிரிக்கெட்டில் ரோல்மாடலாக பார்க்கும் அவர் எனக்கு அறிவுரை கூறுவது மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை நான் ஆஸ்திரேலியா சென்று இருந்தபோது எனது பார்ம் சற்று மோசமாகவே இருந்தது. ஆனாலும் என்னிடம் வந்த ஷேன் வார்ன் போட்டிக்கு முன்னதாக எனது தோள்மீது கை வைத்து :

- Advertisement -

“இந்த போட்டி முழுவதும் நீ நன்றாக பந்து வீசவில்லை என்றாலும் உன் முகத்தில் நான் சிரிப்பை மட்டும் தான் பார்க்கவேண்டும்”. நீ எப்படி பந்து வீசுகிறாய் என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. ஆனால் உன் முகத்தில் சிரிப்பை தவிர வேறு எதையும் நான் பார்க்க கூடாது என்று தெரிவித்திருந்தார். அவரது அந்த வார்த்தைக்கு இணங்க அந்த போட்டி முழுவதுமே நான் சிரித்த முகத்துடன் இருந்தேன்.

இதையும் படிங்க : நாளைய போட்டியில் அந்த முக்கியமான உலகசாதனையை இந்திய அணி செய்யுமா? – டிராவிட் விளக்கம்

அதன் காரணமாக என்னால் சிறப்பாக பந்து வீசவும் முடிந்தது. அத்தோடு அந்த போட்டியில் நான் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினேன். அந்த நிகழ்வு என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. அதோடு அவர் எனக்கு கொடுத்த அந்த அறிவுரை தான் எனது சிறப்பான ஆட்டத்திற்கு காரணமாகவும் அமைந்தது. கிரிக்கெட்டில் நாம் ரோல் மாடலாக பார்க்கும் ஒருவரே நம்மிடம் இதுபோன்று நெருக்கமாக இருந்தது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement