அஷ்வின் ரிட்டயர்டு ஆனது கரெக்ட் தான்.. ஆனா இவங்க 2 பேரும் ரிட்டயர்டு ஆனது எனக்கு கஷ்டமா இருந்தது – குல்தீப் யாதவ் கருத்து

Kuldeep Yadav
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றது குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக அஸ்வினின் ஓய்வு தனக்கு ஏமாற்றம் தரவில்லை என்றும் ஆனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஏமாற்றத்தை அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

அவங்க 2 பேரும் ரிட்டயர்டு ஆனது வருத்தம் தான் : குல்தீப் யாதவ்

ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த போது அவரது முடிவை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் அவரது உடற்தகுதியை கணக்கில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்திருந்தார். ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் தற்போது உடற்தகுதியிலும் சரி, பேட்டிங் பார்மிலும் சரி மிகச் சிறப்பாக இருக்கும் அவர்கள் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.

- Advertisement -

அதோடு அவர்கள் இருவரும் அணியில் இருக்கும் போது இளம் வீரர்களான எங்களால் இயல்பாக விளையாட முடிந்தது. ஏனெனில் அனுபவ வீரர்களான அவர்கள் தங்களுக்கு பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் எங்களால் எங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. ரோகித் சர்மா களத்தில் மட்டுமின்றி வெளியிலும் சரி எனக்கு ஒரு மூத்த சகோதரரை போன்றவர்.

நான் எப்போது பந்துவீச்சில் தடுமாறினாலும் எனக்கு ஊக்கத்தை அளித்து சிறப்பாக செயல்பட வைத்தார். அவரது தலைமையின் கீழ் விளையாடியதில் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதேபோன்று நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகும் போது விராட் கோலி அந்த போட்டியில் விளையாடவில்லை. ஆனாலும் அவர்தான் என்னுடைய அறிமுக தொப்பியை வழங்கினார் அதை என்னால் மறக்கவே முடியாது.

- Advertisement -

அதன் பின்னர் அவருடைய தலைமையின் கீழ் நான் பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். என்னை பொறுத்தவரை விராட் கோலி மிகச் சிறப்பான கேப்டனாக இருந்துள்ளார். அதிலும் குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவளித்து ஆக்ரோஷமாக செயல்பட வைப்பதில் விராட் கோலி தலைசிறந்தவர்.

இதையும் படிங்க : வரலாறு காணாத இரட்டை வினோதம்.. சைக்கிளில் வந்த வீரர்கள்.. 40 நிமிடம் நின்ற போட்டி.. நடந்தது என்ன?

தற்போது அவர்கள் தங்களது கரியரின் கடைசி கட்டத்தில் இருந்தாலும் இன்னும் சில ஆண்டுகள் அவர்களால் நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்க முடியும் ஆனால் அவர்கள் இப்படி திடீரென ஓய்வு அறிவித்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அதோடு எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மிகப்பெரிய தொடர் எனவே அவர்களை போன்ற அனுபவ வீரர்கள் நிச்சயம் அணியில் இருந்திருக்க வேண்டும். பெரிய தொடர் என்றால் பெரிய வீரர்களின் இருப்பு என்பது மிகவும் அவசியம் என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement