வரலாறு காணாத இரட்டை வினோதம்.. சைக்கிளில் வந்த வீரர்கள்.. 40 நிமிடம் நின்ற போட்டி.. நடந்தது என்ன?

ENG vs WI
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அந்த சூழ்நிலையில் 3வது மற்றும் கடைசிப் போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு துவங்கியது.

அப்போது வழக்கம் போல இங்கிலாந்தை சேர்ந்த வீரர்கள் பயிற்சிகளை எடுத்து போட்டியில் விளையாடுவதற்காக தயாராக இருந்தனர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் யாருமே மைதானத்தில் தென்படவில்லை. அவர்களுடைய பெவிலியன் அறைக்குச் சென்று பார்த்த போது அங்கே யாருமே இல்லாததால் குழப்பத்தில் ஆழ்ந்த நடுவர்கள் டாஸ் தாமதமாக வீசப்படும் என்று அறிவித்தார்கள்.

- Advertisement -

வினோத காரணம்:

அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு என்னவாயிற்று? என்று தேடிய போது தான் வினோதமான செய்தி வெளியானது. அதாவது லண்டன் நகரில் உள்ள (தேம்ஸ்) ஆற்றின் வடக்கு சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்தப் போக்குவரத்து நெரிசலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேருந்து சிக்கிக்கொண்டது.

அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியினரால் சரியான நேரத்திற்கு மைதானத்திற்கு வர முடியவில்லை என்பது தெரிய வந்தது. அதைப் பார்த்தவர்களுக்கு இங்கிலாந்து அணியினர் மட்டும் எப்படி சரியான நேரத்திற்கு வந்தார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அப்போது தான் மற்றொரு வினோதம் தெரிய வந்தது. அதாவது இங்கிலாந்து வீரர்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் தெரிந்து வைத்துள்ளார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் வியப்பு:

அதனால் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் தனித்தனியாக சைக்கிளில் சரியான நேரத்திற்கு மைதானத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர். அதைப் பற்றிய வீடியோவை இங்கிலாந்து வாரியம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இறுதியாக 40 நிமிடங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தாமதமாக வந்ததால் போட்டி 1.10 மணிக்கு துவங்கியது.

இதையும் படிங்க: பிசிசிஐ’யை விடுங்க.. ரோஹித், விராட் கோலிக்கு நீங்க ஃபேர்வெல் தரோம்.. ஆஸி வாரியம் அறிவிப்பு

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக வைத்தது. வரலாற்றில் இதற்கு முன் மழை, சூரிய வெளிச்சம், நாய், பறவை போன்ற பல்வேறு காரணிகள் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தோம். ஆனால் இன்றையப் போட்டியில் போக்குவரத்து நெரிசல் என்ற வினோதமான காரணம் சர்வதேச கிரிக்கெட் போட்டியை இடையூறு செய்தது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது.

Advertisement