என்னை அணியில் சேர்க்காதது வருத்தமாக இருந்தாலும், என்னால் எதுவும் செய்ய முடியல – இளம் வீரர் வருத்தம்

Kuldeep

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. 20 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவின் பெயர் இடம் பெறவில்லை. இந்திய அணியில் குல்தீப் யாதவை எடுக்காததால், பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய தேர்வுக் குழுவை விமர்ச்சித்து வருகின்றனர். இந்நிலையில் என்னை தேர்வு செய்யாதது எனக்கு அதிர்ச்சியை தந்தாலும், அதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது என்று பேட்டியளித்திருக்கிறார் குல்தீப் யாதவ்.

kuldeep 1

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாடிய குல்தீப் யாதவ், அந்த போட்டியில் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். ஆனால் அதற்கடுத்து கொரானா தாக்கத்தின் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. அதற்குப்பின் ஓராண்டு கழித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் இந்த தொடரில் குல்தீப் யாதவ் விளையாடும் அணியில் சேர்கப்படாமல் வெளியே அமர வைக்கப்பட்டார். கடந்த இங்கிலாந்து தொடரின் போது ஒரு போட்டியில் மட்டும் குல்தீப்பிற்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த போட்டியில் சரியாக விளையாடாத காரணத்தில் தற்போது இந்திய அணியிலிருந்தே அவர் ஓரம்கட்டப்பட்டுள்ளார் . இதுகுறித்து பேசிய அவர்,

- Advertisement -

கொரானா காரணமாக கடந்த ஓராண்டாகவே என்னால் தொடர்ந்து போட்டிகளில் ஈடுபடமுடியிவில்லை. அதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். நிறைய வீரர்கள் அதிக மன வலிமையுடன் இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி இருப்பார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை. அதனால் என்னையே நான் பலமுறை கேள்விகள் கேட்டுக் கொண்டேன். சில நேரங்களில் இது நான்தானா இல்லை வேறு நபரா என்ற எண்ணம்கூட எழும். அப்போதெல்லாம் எனக்கான வாய்ப்பு வருமென்ற நம்பிக்கையில் இருந்தேன்.

Kuldeep

ஆரம்பத்தில், விளையாடும் வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று கொடுப்பதை விரும்பினேன், ஆனால் நாட்கள் செல்ல செல்ல என்னால் வெளியில் அமர்ந்துகொண்டு இருக்க முடியிவில்லை என்று கூறினார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார் குல்தீப் யாதவ். ஆனால் அந்த அணி ஒரு போட்டியில்கூட விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதைப் பற்றி பேசிய அவர், எனக்கு என்னுடைய அணி வாய்ப்பு வழங்கப்படாதபோது, நான் அவ்வளவு மோசமாகவா விளையாடுகிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். எனக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அணி நிர்வாகத்திடமே நேரிடையாக கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் தவறாக போய்விடுமென்று அதைப் பற்றி நான் எதுவும் கேட்கவில்லை.

- Advertisement -

kuldeep

மேலும் பேசிய அவர், சென்னை ஆடுகளம் ஸ்பின்னுக்கு நன்றாக ஒத்துழைத்த போதும் அவர்கள் என்னை அணிக்குள் எடுக்கவில்லை. அணி நிர்வாகத்தின் இந்த முடிவு எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. பயோ பபுளின் விதிமுறைகள், விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் பல சவால்களை தந்தது. ஆனால் வெளியில் அமர்ந்திருந்த எனக்குத்தான் எந்த சவால்களும் இல்லாமல் இருந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement