முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும்போது என்னோட மனநிலை சரியாக இல்லை – இந்திய அணியின் இளம்வீரர் பகிர்ந்த தகவல்

IND-bowlers
- Advertisement -

2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அப்போது யார் என்ன பேசினார்கள் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாமல் திகைத்து நின்றதாக அவர் கூறியுள்ளார்.

Kuldeep

- Advertisement -

அவர் தனது முதல் டெஸ்ட் போட்டி குறித்து பேசிய குல்திப் யாதவ் : எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்ததை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் சற்று தயக்கமாக தான் அப்போது இருந்தேன். ஏனெனில் அது எனக்கு முதல் டெஸ்ட் போட்டி என்னை சுற்றி இருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் ? என்னை பற்றி என்ன பேசப் போகிறார்கள் என்று கவனிக்க கூட நான் விரும்பவில்லை.

எப்படியும் என் வாழ்வில் அந்த போட்டி ஒரு பெரும் திருப்புமுனையாக அமையப்போகிறது என்பது மட்டும் எனக்கு தெரியும். அதேபோன்று இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த கனவு நினைவான எனது முதல் போட்டியின் முதல் நாளிலேயே நான் விக்கெட் வீழ்த்தினேன்.

umesh kuldeep

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் என்று கூறியுள்ளார். குல்தீப் யாதவ் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகித்தார். மேலும் இதனை தொடர்ந்து பேசிய அவர் தனது ஹாட்ரிக் விக்கெட் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

2019ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் அவர் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் எடுத்தார் இதுகுறித்து அவர் கூறுகையில் : எனது வாழ்வின் முக்கியமான தருணமாக நான் இந்த போட்டியை குறிப்பிடுவேன். ஏனெனில் உலக கோப்பை போட்டிக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நானும் சாஹலும் இணைந்து விளையாடினோம்.

kuldeep-yadav

அந்த போட்டியை எங்களால் மறக்கவே முடியாது என்றும் புகுலதீப் கூறியது குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளையும், 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 104 விக்கெட்டுகளையும், 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement