இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பிடித்திருந்த இளம் வீரர் அணியில் இருந்து நீக்கம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

IND
- Advertisement -

இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக வீரர்களுக்கு சுழற்சிமுறையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரில் கூட இளம் வீரர்கள் பலர் இடம் பெற்றிருந்தார்கள். அதே போன்று இலங்கை அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரில் கூட ஒரு சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியில் கடந்த 2017ஆம் ஆண்டே அறிமுகமாகியிருந்தாலும் இங்கிலாந்தில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பின்னர் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போக கடந்த சில ஆண்டுகளாக அவர் தனது வாய்ப்புக்காக கடுமையாக பயிற்சி செய்து கொண்டிருந்தார். மேலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படாமல் போனது.

இருப்பினும் ரோஹித் பதவியேற்ற பின்னர் அவருக்கு ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதே வகையில் இலங்கை அணிக்கு எதிரான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவர் இந்திய அணியில் இணைந்து இருந்தார். ஆனால் முதல் போட்டியின்போது ஜெயந்த் யாதவ் 3 ஆவது ஸ்பின்னராக விளையாடியதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

kuldeep 1

இந்நிலையில் ஜெயந்த் யாதவ் முதல் போட்டியில் சொதப்பியதால் இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலாவது குல்தீப் யாதவ்க்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த இரண்டாவது போட்டிக்கு முன்னதாக அவர் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கப்படவில்லை. தொடர்ச்சியாக இந்திய அணியின் பயோ பபுள் வளையத்தில் இருந்து வருவதால் அவரது மனரீதியாக உற்சாகமடைய அவருக்கு இந்த விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் ஆரம்பித்த பின்னர் இரண்டு மாத காலம் நடைபெற உள்ளதால் இந்த சில நாட்கள் அவர் தனது குடும்பத்தினருடன் செலவு செய்யவே அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : நாளைய 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் இந்த மாற்றம் இருக்கும் – துணைக்கேப்டன் பும்ரா பேட்டி

எனவே நிச்சயம் மீண்டும் அவர் சிறப்பாக அணிக்கு திரும்புவார் என்று பும்ரா கூறினார். மேலும் இந்த இரண்டாவது போட்டியில் அக்சர் பட்டேல் இந்திய அணிக்கு திரும்புவதில் மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்ததன் மூலம் அக்சர் படேல் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement