ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் விளையாடிய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது அந்த அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. அதோடு இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற இந்திய அணி முதல் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.
2 ஆவது இந்திய வீரராக குல்தீப் யாதவ் நிகழ்த்திய சாதனை :
அதன்படி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 13.1 ஓவர்களிலேயே 57 ரன்களுக்கு சுருண்டது.
பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை இந்திய அணி 4.3 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் மட்டும் இழந்து விரட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் 2.1 ஓவர் மட்டுமே பந்துவீசி 7 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அவர் எடுத்த 4 விக்கெட்டுகளின் மூலம் புவனேஸ்வர் குமாருக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக முக்கிய சாதனை ஒன்றினையும் குல்தீப் யாதவ் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
ஆசிய கோப்பை போட்டிகள் டி20 ஆட்டங்களாக நடைபெற்ற போது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரராக புவனேஸ்வர் குமார் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரானது டி20 போட்டிகளாக நடைபெற்ற போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக புவனேஸ்வர் குமார் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிங்க : ஒட்டு மொத்தமாக 4 ஆவது இந்திய வீரராகவும்.. சேஸிங்கில் முதல் இந்திய வீரராகவும் அபிஷேக் சர்மா – நிகழ்த்திய சாதனை
இதுவே ஆசிய கோப்பை டி20 தொடரில் ஒரு வீரர் வெளிப்படுத்திய சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதற்கடுத்து தற்போது இரண்டாவது இந்திய வீரராக ஆசிய கோப்பை டி20 போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி குல்தீப் யாதவ் அசத்தியுள்ளார். இவர்கள் இருவருக்கு அடுத்து ஷதாப் கான் மற்றும் முகமது நபி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.



