ஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை இவங்க 2 பேருக்கும் எதிரா பவுலிங் பண்றது ரொம்ப கஷ்டம் – குல்தீப் யாதவ் தேர்வு

Kuldeep

இந்திய அணியின் ஸ்பின் ஜோடிகள் என்று நாம் பேச தொடங்கினால் அதில் முதலில் நம் நினைவிற்கு வருவது அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன்சிங் ஜோடி தான். அதற்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிகமாக பேசப்பட்ட ஒரு ஜோடி என்றால் அது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி தான். இவர்களுக்கு அடுத்தபடியாக 2017 முதல் 2019 வரை யுஸ்வேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி மிகப்பெரிய அளவில் அனைவரையும் கவர்ந்தனர். 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் எதிரணி வீரர்களின் விக்கெட்டுகளை இவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு எடுப்பார்கள்.

Kuldeep-1

ஆனால் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி 2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அவ்வளவாக விளையாடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் இருவருக்குமான வாய்ப்பு குறைய ஆரம்பித்தது. அதேபோல்தான் ஐபிஎல் தொடரிலும், ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் சஹாலுக்காவது பெங்களூர் அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குல்தீப் யாதவுக்கு அந்த வாய்ப்புகள் கூட தற்பொழுது வழங்கப்படுவது இல்லை.

ஒருகாலத்தில் அபாரமாக விளையாடி கொல்கத்தா அணிக்காக பல விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தார்.2017ஆம் ஆண்டு 12 விக்கெட்டுகளையும், 2018ஆம் ஆண்டு 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அவருடைய பந்துகளை அனைவரும் கணிக்க தொடங்கிவிட்டனர். அதன் விளைவாக அவருடைய பந்துகளை அனைவரும் அடித்து ஆட இதன் காரணமாக பாதி போட்டிகளில் அவரை கொல்கத்தா அணியை வெளியே உட்கார வைத்தது.

Kuldeep

சென்ற ஆண்டு அவர் மறுபடியும் நன்றாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் மிகப்பெரிய அளவில் சொதப்பினார். சென்ற ஆண்டு அவர் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார் என்பது கவலைக்குரிய விஷயமாகும். இது காரணமாக கொல்கத்தா அணி அவரை தனது அணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் பேசியுள்ள குல்தீப், கண்டிப்பாக இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நான் நன்றாக விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்துள்ள 3 போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், இனி வரும் போட்டிகளில் நிச்சயமாக எனக்கு நாம் ஆடும் வாய்ப்பு வழங்கப்படும் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

abd

rohith 2

மேலும் ஐபிஎல் தொடரில் எந்த பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவது கடினம் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ரோகித் சர்மா மற்றும் ஏபி டிவிலியர்ஸ் என்று கூறியுள்ளார். ஏபி டிவில்லியர்ஸ் மைதானத்தின் எந்த மூலைக்கும் பந்தை அடிக்க கூடிய ஆற்றல் உடையவர், அதேபோல ரோஹித் சர்மா பந்தை சரியான நேரத்தில் கணித்து டைமிங்கில் அடிக்கக்கூடிய புத்திசாலி, எனவே இவர்கள் இருவருக்கும் பந்து வீசுவது மிகக் கடினம் என்று இறுதியாக கூறி முடித்தார்.