- Advertisement -
இந்திய கிரிக்கெட்

248 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி.. குல்தீப் யாதவ் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் என்று குவித்து டிக்ளர் செய்தது.

சாதனை நிகழ்த்திய குல்தீப் யாதவ் :

அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 248 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 270 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் மீண்டும் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் மீண்டும் ஒருமுறை இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. போட்டியின் இன்றைய நாளின் முடிவிலோ அல்லது நாளைய நான்காம் நாள் ஆரம்பத்திலோ ஆட்டம் முடிந்துவிடும் என்பதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 26.5 ஓவர்களை வீசி 82 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஜானி வார்ட்லி சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். அதாவது டெஸ்ட் போட்டிகளில் இடதுகை ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜானி வார்ட்லீடன் தற்போது குல்தீப் யாதவும் ஐந்து முறை டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரஞ்சி டிராபி டெல்லி அணியிலும் இடம்பெறாத ரிஷப் பண்ட்.. எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்? – விவரம் இதோ

ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -