ஏற்கனவே டீம்ல சேக்கல. இப்போ இது வேறயா ? புது சர்ச்சையில் சிக்கிய குல்தீப் யாதவ் – விவரம் இதோ

Kuldeep
- Advertisement -

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ்க்கு சமீபகாலமாகவே இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட ஐபிஎல் தொடரிலும் ஒரு போட்டியில் கூட விளையாடாத அவர் டெஸ்ட் அணியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளார். அவரது இந்தப் பிரச்சினை ஒரு புறம் இருக்க தற்போது புதிய சிக்கலில் அவர் சிக்கியிருக்கிறார். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

kuldeep 1

- Advertisement -

இவ்வேளையில் மக்கள் தங்களது உயிர்களை காத்துக்கொள்ள கொரனோ தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்வது அவசியம் என்று அனைத்து மாநிலங்களும் மக்களிடையே விழிப்புணர்வு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு வருகின்றனர். இதில் பல பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அனைவரும் போட்டுக் கொள்ளுமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கான்பூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்ட குல்தீப் யாதவ் கடந்த 16ஆம் தேதி அந்த புகைப்படத்தை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்துள்ளார். இப்படி அவர் பகிர்ந்த ஒரு புகைப்படம் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏனெனில் பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகினர், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

kuldeep

இந்த வேளையில் குல்தீப் யாதவ் மட்டும் கான்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் முன்பதிவு மூலம் தடுப்பூசியை பெற்று தனது சொந்த பங்களாவிற்கு வரவழைத்து தடுப்பூசியை போட்டுள்ளார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வேளையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி எவ்வாறு அவர் மருத்துவரை வீட்டுக்கு அழைத்து தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்பது என்று அவர் மீது விசாரணை நடக்க உள்ளது.

விசாரணை நடந்து அவர் செய்தது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து கான்பூர் மாவட்ட நீதிபதி மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அணியில் இடம் இல்லாமல் தவிக்கும் இவருக்கு தற்போது தடுப்பூசி போடுவதன் மூலமாக வந்துள்ள சிக்கல் மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement