சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யுஸ்வேந்திர சாஹலின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ் – விவரம் இதோ

Kuldeep-Yadav-Chahal
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இருப்பினும் இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள வேளையில் அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் வாய்ப்பும் உள்ளது.

இதன் காரணமாக இந்த தொடரில் எஞ்சியுள்ள 2 இரண்டு போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் உச்சத்தை தொட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நான்காவது டி20 போட்டியும், ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஐந்தாவது டி20 போட்டியும் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் கயானா நகரில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யுஸ்வேந்திர சாஹலை முந்தி ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் மூன்றாவது போட்டியின் போது நான்கு ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவர் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 30 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதோடு இந்திய பந்து வீச்சாளராக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையும் அவர் சாஹலிடம் இருந்து தட்டிப் பறித்துள்ளார். இதற்கு முன்னதாக சாஹல் 34 போட்டியில் விளையாடிய போது 50 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

இதையும் படிங்க : IND vs WI : அதுல சொதப்புறது உண்மை தான், அதை ஒத்துக்க நான் அவமானப்படல – தன் மீதே சூரியகுமார் வருத்தமான பேட்டி

ஆனால் அதனை தற்போது முப்பது போட்டியிலேயே குல்தீப் யாதவ் செய்து காட்டியுள்ளார். அவர்களை தவிர்த்து உலகளவில் அஜந்தா மெண்டிஸ் 26 போட்டிகளில் 50 விக்கெட்டுகளையும், மார்க் அடையர் 28 போட்டிகளில் 50 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement