MS Dhoni : ஸ்டம்பின் பின்னால் தோனி இருந்தால் மட்டுமே இவரால் சிறப்பாக பந்துவீச முடியும் – கொல்கத்தா வீரர்

ஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமை

Kuldeep
- Advertisement -

ஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் மோதின.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 58 பந்துகளில் 100 ரன்களும், மொயின் அலி 28 பந்தில் 66 ரன்களையும் குவித்தனர்.

பிறகு 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. ரசல் 25 பந்துகளில் 65 ரன்களும், ராணா 46 பந்துகளில் 85 ரன்களையும் குவித்தனர். பெங்களூரு அணி வெற்றியை ருசித்தது கேப்டன் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

kuldeep

இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் 4 ஓவர்களை வீசி 59 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்திய அணியில் சிறப்பாக வீசிவரும் குல்தீப் யாதவ் இந்த ஐ.பி.எல் தொடரில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். 2017 ஆம் ஆண்டு 17 விக்கெட் வீழ்த்தி ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதாலே குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு தேர்வானார். ஆனால், உலகக்கோப்பை தொடர் அருகில் இருக்கும் போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மொயின் அலி அவர் ஓவரில் தொடர்ந்து 5 பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

kuldeep

மேலும், இந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீச திணறிவரும் குல்தீப் அதிக அளவு ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார். ஆனால், இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். அதற்கு காரணம் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து தோனி கொடுக்கும் அறிவுரையே இந்திய அணியில் குல்தீப் சிறப்பாக பந்துவீச காரணம் என்றும், தோனி இல்லாததால் அவரால் கொல்கத்தா அணியில் சோபிக்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் உலகக்கோப்பை அணியில் சிறப்பாக வீச வாழ்த்துக்கள்.

Advertisement