100/1 டூ 218.. சீட்டுக்கட்டாக சரிந்த பஸ்பால் இங்கிலாந்து.. பால் ஆடம்ஸ் போல முதல் இந்திய வீரராக குல்தீப் தனித்துவ சாதனை

Kuldeep Yadav 3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலா நகரில் இன்று துவங்கியது. அதில் ஏற்கனவே தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டை இங்கிலாந்து ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஓபனிங் ஜோடி 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தையும் கொடுத்தது.

ஆனால் அதில் பென் டக்கெட்டை 27 ரன்களில் காலி செய்த குல்தீப் யாதவ் அடுத்ததாக வந்த ஓலி போப்பையும் மாயாஜால சுழலால் ஸ்டம்ப்பிங் முறையில் 11 ரன்களில் அவுட்டாக்கினார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லி எதிர்ப்புறம் அரை சதமடித்து 79 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 100/1 என்ற வலுவான நிலையில் இருந்தது.

- Advertisement -

சரிந்த பஸ்பால்:
இருப்பினும் அப்போது 10.9 டிகிரி அளவுக்கு சுழலக் கூடிய மாயாஜால பந்தை வீசி ஜாக் கிராவ்லி கிளீன் போல்ட்டாக்கிய குல்தீப் யாதவ் தன்னுடைய 100வது போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்த ஜானி பேர்ஸ்டோவையும் 29 (18) ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார். அதற்கிடையே ஜோ ரூட் 26 ரன்களில் ஜடேஜா சுழலில் அவுட்டான நிலையில் பென் போக்ஸ் 24, டாம் ஹார்ட்லி 6, மார்க் வுட் 0, ஜேம்ஸ் ஆண்டர்சன் 0 ரன்களில் அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தனர்.

அந்த வகையில் 100/1 என்ற வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்தை பின்னர் அபாரமாக பந்து வீசி மடக்கிப் பிடித்த இந்தியா வெறும் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது. இந்திய அணிக்கு குல்தீப் யாதவ் 5, ரவிச்சந்திரன் அஸ்வின் 4, ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டுகள் எடுத்தனர். குறிப்பாக சைனாமேன் எனும் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து பந்து வீசி வரும் இடது கை மணிக்கட்டு ஸ்பின்னரான குல்தீப் யாதவ் இதையும் சேர்த்து தன்னுடைய கேரியரில் 12 போட்டிகளில் 51* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய இடது கை மணிக்கட்டு ஸ்பின்னர் என்ற தனித்துவமான சாதனையும் குல்தீப் வைத்துள்ளார். இதற்கு முன் உலக அளவில் தென்னாபிரிக்காவின் பால் ஆடம்ஸ் (134 விக்கெட்கள்) மற்றும் இங்கிலாந்தின் ஜானி வார்ட்லே (102 விக்கெட்கள்) மட்டுமே இடது கை மணிக்கட்டு ஸ்பின்னராக 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 94 ரன்ஸ் 6 விக்கெட்ஸ்.. மாயாஜாலத்தால் இங்கிலாந்தை சரித்த குல்தீப் யாதவ்.. அக்சர் படேலை முந்தி புதிய அதிவேக சாதனை

மறுபுறம் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இங்கிலாந்து மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 250 ரன்கள் கூட அடிக்காமல் சரிந்தது. அதனால் கடைசி வரை இந்த தொடரில் அந்த அணியின் பஸ்பால் அணுகுமுறை எடுபடவில்லை என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து இந்தியா முன்னிலைப் பெறும் முனைப்புடன் பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement