இந்த மாச கடைசியில் எனக்கு லீவ் வேணும்.. பி.சி.சி.ஐ-யிடம் வேண்டுகோள் வைத்த குல்தீப் யாதவ் – எல்லாம் நல்ல செய்தி தான்

Kuldeep Yadav
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அந்த வகையில் கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடியிருந்தார்.

பி.சி.சி.ஐ-இடம் விடுப்பு கேட்ட : குல்தீப் யாதவ்

இதற்கு அடுத்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் அவர் இம்மாத இறுதியில் தனக்கு விடுப்பு வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்த விவரமும் தற்போது வெளியாகி பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் குல்தீப் யாதவ் விடுப்பு எடுப்பதற்கு காரணம் யாதெனில் : தற்போது 30 வயதை எட்டியுள்ள குல்தீப் யாதவ் இம்மாத இறுதியில் தனது திருமணத்திற்காக தயாராகி வருகிறார். இம்மாத இறுதியில் அவரது திருமணம் நடைபெற இருப்பதினால் குறிப்பிட்ட சில நாட்கள் தனக்கு விடுமுறை வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பி.சி.சி.ஐ அவருக்கு தேவையான நாட்கள் மட்டுமே விடுப்பு கொடுக்க முடிவு செய்துள்ளது.

- Advertisement -

அதோடு ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் விளையாட வைக்க முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளது. இருந்தாலும் குல்தீப் யாதவிற்கு எத்தனை நாட்கள் விடுமுறை கேட்டுள்ளார்? பிசிசிஐ எத்தனை நாட்கள் அவருக்கு அனுமதி வழங்கியிருக்கிறது? என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க : இதை செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை நம்பி தான் விளையாடினோம் – தெம்பா பவுமா மகிழ்ச்சி

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் நிச்சயம் திருமண நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு குல்தீப் யாதவ் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement