கடைசி பந்துவரை த்ரில். ஆஸி வீரருக்கு தண்ணி காட்டி ராஜஸ்தானை வெற்றிபெற வைத்த இளம் இந்திய வீரர்

Stoinis Kuldeep Sen
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 10-ஆம் தேதியான நேற்று 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரவு 7.30 மணிக்கு நடந்த 20-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அப்போட்டியில் டாஸ் வென்ற வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 13 (11) ரன்களும் தேவ்தூத் படிக்கள் 29 (29) ரன்களும் எடுத்தனர். இதனால் 42/1 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற ராஜஸ்தானுக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 13 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அவருடன் களமிறங்கிய ராசி வேன் டேர் டுஷன் 4 (4) ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இதனால் 10 ஓவர்களில் 67/4 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியாக பேட்டிங் செய்து 36 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் உட்பட 59* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக ரவிச்சந்திரன் அஸ்வின் 28 (23) எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்த ராஜஸ்தான் 165 ரன்கள் எடுத்தது. லக்னோ சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

மிரட்டிய போல்ட்:
அதை தொடர்ந்து 166 என்ற இலக்கை துரத்திய லக்னோவுக்கு தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் ராஜஸ்தான் அதிரடி பவுலர் டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய கௌதமையும் கோல்டன் டக் அவுட் செய்த ட்ரெண்ட் போல்ட் ஆரம்பத்திலேயே லக்னோவை மிரட்டினார். இதனால் 1/2 படுமோசமான தொடக்கத்தை பெற்ற அவர்களுக்கு அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் 8 (14) ரன்களில் அவுட்டாகி மீண்டும் அதிர்ச்சி அளித்தார்.

அதனால் 14/3 என தடுமாறிய லக்னோவை காப்பாற்ற களமிறங்கிய இளம் வீரர் தீபக் ஹூடா 25 (24) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க கடந்த போட்டிகளில் அற்புதமான பினிஷிங் கொடுத்த இளம் வீரர் ஆயுஷ் படோனியும் 5 (7) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 39 (32) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அவருடன் தனது பங்கிற்கு 2 பவுண்டரி உட்பட 22 (15) ரன்கள் எடுத்து அதிரடி காட்டிய க்ருனால் பாண்டியாவும் சஹால் பந்தில் போல்டானார்.

- Advertisement -

அனல் பறந்த கடைசி ஓவர்:
அதன் காரணமாக 102/7 என திண்டாடிய லக்னோவின் தோல்வி உறுதி என நினைத்த வேளையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்க விட்டதால் திடீரென போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு துணையாக இலங்கை வீரர் சமீரா 7 பந்துகளில் 2 பவுண்டரி உட்பட 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் ஆட்டத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது அதை முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டியில் விளையாடிய குல்தீப் சென் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த அவேஷ் கான் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை அதிரடி வீரர் ஸ்டாய்னிசிடம் கொடுக்க அதற்கு அஞ்சாத குல்தீப் சென் அடுத்த 3 பந்துகளில் வரிசையாக ஒரு ரன் கூட விடாமல் அற்புதமாக பந்து வீசினார்.

- Advertisement -

இருப்பினும் 5-வது பந்தில் பவுண்டரி பறக்க விட்ட ஸ்டோனிஸ் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த போதிலும் தனது அணியை வெற்றி பெற வைக்க முடியாததால் அவரின் 38* (17) ரன்கள் போராட்டம் வீணானது. இதனால் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்த ராஜஸ்தான் இந்த வருடம் பங்கேற்ற 4 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த அசத்தியது.

தண்ணி காட்டிய குல்தீப்:
இந்த சிறப்பான வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தி முக்கிய பங்காற்றிய யுஸ்வென்ற சஹால் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆனாலும் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டபோது அதை முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடிய ராஜஸ்தான் இளம் வீரர் குல்தீப் சென் தைரியமாக தில்லாக அதுவும் ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற தரமான பேட்ஸ்மேனுக்கு எதிராக அற்புதமாக வீசி வெற்றி பெற வைத்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

இதையும் படிங்க : அடுத்த மேட்ச் தான் உங்களுக்கு லாஸ்ட். கெடு விதித்த சி.எஸ்.கே – அணியை விட்டு விலக தயார் (இளம்வீரர் முடிவு)

அதிலும் அந்தப் போட்டியின் அதிவேகமான 147 கீ.மீ பந்தை அந்த பரபரப்பான கடைசி ஓவரில் அவர் வீசியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

Advertisement