என்னுடைய சிறப்பான பந்துவீச்சிற்கு இவர்கள் இருவரே காரணம் – குல்தீப் யாதவ் ஓபன் டாக்

Kuldeep
- Advertisement -

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் அசத்தலாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் பெற்றவர் குல்தீப் யாதவ். அந்த உலக கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து ‘சைனாமேன்’ பந்து வீச்சாளரான இவருக்கு இந்திய அணியிலும் மவுசு கூடியது.

Kuldeep

- Advertisement -

அதற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அவரை வளைத்துப் போட்டது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கௌதம் கம்பீர் மற்றும் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வாசிம் அக்ரம் ஆகியோர் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்ததாக குல்தீப் யாதவ் தற்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் :

கொல்கத்தா அணிக்கு ஆடத் தொடங்கிய நாட்களிலிருந்து கவுதம் கம்பீர் எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார். அவருடய பெரிய தாக்கம் என்னுள் இன்னும் இருக்கிறது. என்னிடம் நிறைய பேசிக்கொண்டே இருப்பார். களத்தில் மட்டுமல்லாது களத்திற்கு வெளியிலும் நிறைய பேசியுள்ளார்.

Kuldeep 1

கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு நிறைய கற்றுக் கொடுத்து விட்டார். எப்போதும் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். கேப்டனின் ஆதரவு ஒரு வீரருக்கு எப்போதுமே, பெரிய உற்சாகத்தை கொடுக்கும். நம்மை தன்னம்பிக்கையுடன் இது ஆட வைக்கும். ஆட்டத்திலும் இதன் தாக்கங்கள் வெளிப்படும். அதேபோல் வாசிம் அக்ரம் சாருக்கும் என்னை மிகவும் பிடிக்கும்.

- Advertisement -

பந்துவீச்சு பற்றி அவர் என்னிடம் அதிகம் பேச மாட்டார். ஆனால் கடினமான சூழ்நிலைகளில் எவ்வாறு நாம் தயாராகிக் கொள்ள வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கிக் கொண்டே இருப்பார் . ஒருவேளை பேட்ஸ்மென்கள் நமது பந்துவீச்சை அடித்து நொறுக்கினால் என்ன செய்வது என்பது பற்றி என்னிடம் நிறைய பேசி உள்ளார்.

akram

கொல்கத்தா அணியில் அவர் அருகில் அமர்ந்து கொண்டு, அவர் பேசுவதை சரியாக பிடித்துக் கொண்டேன் இவ்வாறு கூறியுள்ளார் குல்தீப் யாதவ். கடந்த ஆண்டு தனது பந்துவீச்சில் சிறிதளவு தடுமாற்றம் கண்ட குல்தீப் யாதவ் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அசத்த காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement