4 ஆவது டெஸ்ட் போட்டி : தமிழக வீரருக்கு பதிலாக இடம் பிடிக்கும் சுழற்பந்து வீச்சாளர் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி பகல்-இரவு டெஸ்ட்-ஆக சமீபத்தில் நடந்து முடிந்தது.இதில் இந்தியா பத்து விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அக்ஷர் – அஸ்வின் சுழற் கூட்டணி திகழ்ந்தது.

- Advertisement -

வருகின்ற 4ஆம் தேதி நான்காவது மட்டும் இறுதி டெஸ்ட் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ( மூன்றாவது போட்டி நடந்த அதே மைதானம் ) நடக்க உள்ளது.தொடரை சமன் செய்ய இங்கிலாந்து இந்தப்போட்டியில் வென்றே ஆக வேண்டும். இந்தியா தொடரை வெல்ல இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தாக வேண்டும். தொடரை கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும்.

ஒருவேளை இந்த போட்டியில் தோற்று விட்டால் இந்தியா தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழக்கும்.பிறகு அந்த வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு போய்விடும்.எனவே இவ்விறு அணிகளும் நான்காவது போட்டிக்கு தீவிர வலைப்பயிற்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

axar

நான்காவது போட்டியிலும் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளதால் இவ்விருஅணிகளும் போட்டி போட்டு கொண்டு அதிகளவில் ஸ்பின்னர்களைக் களமிறக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அதில் வாஷிங்கடன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவை களமிறக்க இந்திய அணி திட்டம் வகுத்துள்ளது. மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

Kuldeep

இதனால் இப்போட்டியில் விளையாட உமேஷ் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்கப்படுகிறது. பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இவ்விரு அணிகளும் மோதிக்கொள்ள போகும் போட்டி அனல் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Advertisement