ஸ்டம்பிற்கு பின்னால் தோனி இருந்தவரை எனக்கு இந்த பிரச்சனை வந்ததே இல்லை – குல்தீப் ஓபன்டாக்

kuldeep1
- Advertisement -

மகேந்திர சிங் தோனி என்னும் மனிதன் ஆடுகளத்தில் இருந்தால் போதும் சக வீரர்களுக்கு குஷியாகி விடும். அவர் கடைசி ஓவரில் ரன் அடித்து வெற்றி பெற்றுக் கொடுப்பார், இல்லை விக்கெட் கீப்பிங்கில் பட்டையைக் கிளப்புவார் என்றெல்லாம் நடப்பது சாதாரண விஷயம். ஆனால் அவர் ஆடுகளத்தில் இருந்தாலே வீரர்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கும் .

dhoni

- Advertisement -

விராட் கோலிக்கு ஆலோசனை வழங்குவதிலும் சரி, பந்துவீச்சாளர்களை சரியான பந்தை வீச செய்யும்படி வழி நடத்துவதிலும் சரி, அந்த அளவிற்கு அவரது தாக்கம் ஆடுகளத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

இப்படி இருக்கும் தோனி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் தோல்விக்குப் பின்னர் களத்திற்கும் மீண்டும் வரவே இல்லை. எப்படியாவது ஐபிஎல் தொடரில் ஆடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியிருக்க குல்தீப் யாதவ் தோனியை பற்றி ஒரு சில விஷயங்களைப் பற்றி கூறியுள்ளார்…

kuldeep-yadav

நான் சர்வதேச ஆடுகளத்தில் ஆடும்போது எனக்கு சிரமமாக இருந்தது .ஆடுகளத்தை கணிப்பதில் மிகவும் தடுமாறினேன். பின்னர் தோனியுடன் விளையாட ஆரம்பித்த உடன் ஆடுகளம் குறித்த சரியான புரிதல் எனக்கு கிடைத்தது.

அவர் நாம் பந்துவீசும் போது சரியான ஆலோசனைகளை கொடுத்துக்கொண்டே இருப்பார். பீல்டர்களை எங்கு நிறுத்த வேண்டும் என்று அவருக்கு மிகச்சரியாக தெரியும். நான் பந்துவீசும் போது அவர் கீப்பிங் செய்தால் எனக்கு மிக எளிதாக இருக்கும். நான் எப்படி வீசுகிறேன் என்பதை புரிந்து கொண்டு அந்த இடத்தில் பீல்டரை சரியாக நிறுத்துவார்.
#

அவர் ஸ்டம்பிற்கு பின்னால் இருக்கும்வரை எனக்கு விக்கெட் எடுப்பது எளிதாக இருக்கும் அவர் இருக்கும்போது எனக்கு எந்த கவலையும் இல்லாமல் இருந்தது என்றும் அந்த அளவிற்கு தோனி எனக்கு உறுதுணையாக இருந்தார் என்று கூறியுள்ளார் குல்திப் யாதவ்.

Advertisement