மலிங்காவினை அடுத்து அதிரடியாக திடீரென்று ஓய்வினை அறிவித்த முன்னணி வேகப்பந்துவீச்சாளர் – விவரம் இதோ

Kulasekara

இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா சில தினங்களுக்கு முன்பு ஓய்வு அறிவிப்பினை அறிவித்தார். அதற்கு அடுத்து தற்போது இலங்கை அணியின் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகரா தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

kulasekara 1

2014ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பை வெல்லும் போது அந்த அணியில் இருந்தவர். மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் நம்பர் பந்துவீச்சாளராக இவர் திகழ்ந்துள்ளார்.

- Advertisement -

37 வயதாகும் இவர் 2003 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகினார். இதுவரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் இவர் 21 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 184 ஒருநாள் போட்டியில் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 48 விக்கெட்டும் ஒருநாள் போட்டியில் 199 விக்கெட்டும், டி20 இல் 66 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kulasekara 2

தனது அபாரமான ஸ்விங் மூலம் இலங்கை அணிக்கு ஒரு காலத்தில் முக்கிய பந்து வீச்சாளராக திகழ்ந்தார். அடுத்தடுத்து இரு வீரர்கள் ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டது இலங்கை அணிக்கு தற்போது மேலும் வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement