வீடியோ : இது தான்’யா அம்மா பாசம், அம்மாவின் ஆசிர்வாதத்துடன் அபார ஸ்டம்பிங் செய்த கேஎஸ் பரத்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா குறைந்தது 3 வெற்றிகளை பதிவு செய்து ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் லட்சியத்துடன் விளையாடுகிறது. ஆனால் அதற்கு சவால் கொடுக்க வந்துள்ள ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே சுழலுக்கு சாதகமான மைதானங்கள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தது இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. அந்த நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்ற நாக்பூரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் காயமடைந்த ரிஷப் பண்ட் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு பதிலாக கேஎஸ் பரத் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் நீண்ட கால போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அதில் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடிய சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அபாரமாக செயல்பட்டதால் ஒரு வழியாக கடந்த 2021ஆம் ஆண்டு தனது 30 வயதில் தான் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

- Advertisement -

அதான் அம்மா பாசம்:
அதனாலேயே அந்த வாய்ப்புகளை வீணடிக்காமல் பெரும்பாலான போட்டிகளில் எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கிய அவர் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறி சாதனை படைத்தார். அந்த வகையில் உச்சகட்ட பார்மில் இருப்பதால் ரிஷப் பண்ட் போன்ற அதிரடியாக விளையாடக்கூடிய வீரர் தேவை என்பதற்காக ஒரு வழியாக 32 வயதில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகியுள்ளார்.

அதே போல் ஆந்திராவைச் சேர்ந்த கேஎஸ் பரத் கடந்த 2015 முதல் உள்ளூர் கிரிக்கெட்டிலும் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த வருடம் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ரிஷப் பண்ட் இருந்ததால் தொடர்ந்து பெஞ்சில் அமர்ந்து வந்த அவர் ஒரு வழியாக தற்போது விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த வகையில் தனது கனவு நிஜமான இன்றைய நாளில் தனது இந்திய அணி தொப்பியை நட்சத்திர வீரர் புஜாராவிடம் இருந்து பெற்றுக் கொண்ட கேஎஸ் பரத் இதர வீரர்களின் பாராட்டு மழையுடன் தனது தலையில் அணிந்து கொண்டார்.

- Advertisement -

அதே போல் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி அவர்களது கையால் கலங்கிய கண்களுடன் தனது தொப்பியை வாங்கிக் கொண்ட சூரியகுமார் யாதவும் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றதை நினைத்து மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார். முன்னதாக அறிமுகமாக களமிறங்குவதால் சூரியகுமார் யாதவ் மற்றும் பரத் ஆகிய இருவருடைய குடும்பங்களும் நேரில் வந்து பங்கேற்க பிசிசிஐ சார்பில் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது தங்களது மகன்கள் இந்தியாவுக்காக விளையாடுவதை நினைத்து இரு வீரர்களின் பெற்றோர்கள் மிகவும் பெருமை மிகுந்த தருணத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக கடுமையாக போராடி ஒரு வழியாக முதல் முறையாக இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பை பெற்ற தனது மகன் கேஎஸ் பரத்துக்கு அவருடைய அம்மா கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து குழந்தையை போல் பாசத்தை வெளிப்படுத்தி பாராட்டினார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இந்த உலகிலேயே அம்மாவின் பாசத்துக்கு நிகரானது வேறு என்ன இருக்க முடியும் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க: INDvsAUS : பொறுப்பில் இல்லையென்றாலும் ரவி சாஸ்திரியை அழைத்து கவுரவித்த இந்திய அணி – இதை கவனிச்சீங்களா?

அப்படி அம்மாவின் ஆசிர்வாதத்துடன் களமிறங்கிய பரத் 2/2 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று திண்டாடிய ஆஸ்திரேலியாவை 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் ஜடேஜாவின் சுழலில் சிக்கிய போது கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னுடைய முதல் ஸ்டம்பிங்கை பதிவு செய்து அசத்தினார். அந்த வகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் இதுவரை ஆஸ்திரேலியா 118/5 என்ற நிலையுடன் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement