ஹார்டிக் பாண்டியாவின் புதிய காதல் இவர்தான். உண்மையை போட்டுடைத்த – க்ருனால் பாண்டியா வீடியோ

Krunal
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 7 ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா 48 ரன்களை குவித்தார். ஹார்டிக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்களை குவித்தார்.

Kohli

- Advertisement -

பிறகு ஆடிய பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. அதன்படி தெடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 181 ரன்களை குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டிவில்லியர்ஸ் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டிக்கு பிறகு பேசிய க்ருனால் பாண்டியா பேசியதாவது : எங்கள் வீட்டில் புதிதாக ஒரு குடும்ப உறுப்பினர் இணைந்துள்ளார். அதுவேறு யாருமில்லை ஹார்டிக்கின் புதிய காதல் தான் அது. அவர் புதிய செல்ல நாய் ஒன்றினை வாங்கியுள்ளார். எப்போதும் அவருக்கும் அந்த செல்ல பிராணிக்கும் இடையேயான காதல் என்பது கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

மேலும் அந்த காதலின் நினைவாகவே ஹார்டிக் அவரது கழுத்து பகுதியில் டேட்டூ ஒன்றினையும் குத்தியுள்ளார். இந்த பெட்டியினை அவரது தம்பியான ஹர்டிக் பாண்டியாவே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement