என்னப்பத்தி அவருக்கு தெரியும். அவரப்பத்தி எனக்கு தெரியும் அவர் எனக்கு அண்ணன் மாதிரி – வெஸ்ட் இண்டீஸ் வீரை புகழ்ந்த க்ருனால் பாண்டியா

Krunal
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது.

Ind-vs-Wi

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 58 ரன்கள் குவித்தார். அதன்பிறகு விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 65 ரன்கள் குவித்தார், கோலி 59 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் க்ருனால் பாண்டியா கூறியதாவது : இந்த போட்டியில் வெற்றி எங்களுக்கு சிறப்பான அனுபவத்தை தந்தது. பொல்லார்ட் எனக்கு அண்ணன் மாதிரி அவருடைய வலிமை எனக்கு தெரியும் என்னுடைய வலிமை அவருக்கு தெரியும். அதனால் இந்த போட்டியில் அவர் என்னை சிறப்பாக எதிர்கொண்டார்.

pollard 1

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இருவரும் ஒன்றாக விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பாண்டியா சகோதரர்கள் மற்றும் பொல்லார்டு ஆகியோர் மும்பை அணியின் முக்கிய பலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement