அளவுக்கதிகமான தங்கநகைகளை கொண்டுவந்ததாக விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட மும்பை வீரர் – அதிர்ச்சி தகவல்

srh
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்று பல சாதனைகள் படைத்து விட்டது. நடப்பு ஐ.பி.எல் தொடரை கைப்பற்றியதோடு மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. எந்த ஒரு அணியும் ஐந்து முறை கோப்பையை வென்றதில்லை. இந்த வெற்றிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒவ்வொரு வீரரும் பெரிய காரணமாக இருந்தார்கள்.

mi

- Advertisement -

குறிப்பாக ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது அண்ணன் க்ருனால் பாண்டியா ஆகிய இருவருமே கடந்த 5 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணித்து வருகிறார்கள். இருவருமே மிகச்சிறப்பாக ஒவ்வொரு தொடரிலும் செயல்பட்டு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த வருட இறுதிப் போட்டியிலும் வின்னிங் ஷாட்டை அடித்தவர் க்ருனால் பாண்டியா தான். இந்த போட்டி முடிந்தவுடன் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் அனைவரும் நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்றனர். அதனையொட்டி ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற இந்திய வீரர்கள் நேரடியாக அங்கு சென்று விட்டனர்.

Ishan kishan

ஆனால் மீதமிருந்த மும்பை வீரர்கள் அனைவரும் துபாய் வழியாக இந்தியாவிற்கு வந்தடைந்தனர். இந்தியாவிற்கு வந்தவுடன் மும்பை விமான நிலையத்தில் க்ருனால் பாண்டியா வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த செய்தி உடனடியாக காட்டு தீ போல பரவியது.

krunal 2

மேலும், அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் மற்றும் விலை மதிப்பு மிக்க பொருட்களை அவர் வைத்து இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்றும் கூறப்பட்டது. மேலும் அதில் கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது இதன் காரணமாக சற்று சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது..

Advertisement