தொடர் சர்ச்சையில் சிக்கும் க்ருனால் பாண்டியா. மும்பை அணியில் இவரை விளையாட வைக்க கூடாது – ரசிகர்கள் எச்சரிக்கை

krunal 2

க்ருனால் பாண்டியா சில நாட்களாகவே மிகப்பெரிய சர்ச்சைக்கு ஆளாகி உள்ளார். சையது முஸ்டாக் அலி தொடரில் தீபக் ஹூடாவை அனைவருக்கும் முன்னதாக கடுமையான வார்த்தைகள் மூலம் அவரை திட்டினார் என்று செய்திகள் வெளிவந்தன. ஒரு சக வீரரை இவ்வாறு கடுமையான வார்த்தைகள் மூலம் திட்டுவது நல்லது அல்ல என்று சில வாரங்களாகவே பாண்டியாவை அனைவரும் திட்டி வருவது வழக்கத்திற்குரிய ஒன்றாக மாறிவிட்டது.

krunal

தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த வேளையில், ஆட்டத்திற்கான இடைவெளியை அளிக்கப்பட்டது. அந்த இடைவெளியில் மும்பை அணியின் இளம் வீரர் அனுக்குல் ராய் சானிடைசர் கொண்டு வந்தார்.

அதை ராயிடம் இருந்து வாங்கி உபயோகித்து கொண்ட பாண்டியா, உபயோகித்து முடித்த பின் அவர் முகத்தை கூட பார்க்காமல் தூக்கி வீசி எறிந்தார். இந்த காட்சி வீடியோவில் பதிவானது.
இந்த வீடியோவை தற்போது அனைத்து ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாண்டியா இவ்வாறு நடந்து கொள்வது நல்லதல்ல என்று கூறிவருகின்றனர்.

krunal 1

இளம் வீரர்களிடம் இவ்வாறு திமிராக நடந்து கொள்வது ஆரோக்கியமான விஷயம் கிடையாது என்றும், இனி வரும் போட்டிகளில் இதுபோல் திமிர் பிடித்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்க கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

- Advertisement -

krunal 1

மேலும் பாண்டியவை தற்போது அனைவரும் கலாய்த்து வந்த வண்ணம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவரை சார்ந்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தற்பொழுது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மும்பை ரசிகர்கள் ஒரு சிலர் கூட பாண்டியா இவ்வாறு நடந்து இருக்க கூடாது ஏன் இப்படி நடந்து கொண்டார் என தெரியவில்லை என்றும் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.