கோலி பயன்படுத்தும் கெட்ட வார்த்தையை வைத்து சக வீரரை திட்டிய க்ருனால் பாண்டியா – சர்ச்சையான பாண்டியாவின் செயல்

bumrah

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இடையேயான ஐபிஎல் தொடரின் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படு மோசமாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

cskvsmi

9 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 7 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 50 ரன்களுக்கு ஆட்டம் இழக்க வேண்டிய அணியை, தோனி, சாம் குர்ரன், இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் தடுத்து அடி தூக்கி நிறுத்தினர். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 114 ரன்களுக்கு தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

சென்னை அணியின் இந்த போட்டியின்போது 17-வது ஓவரை க்ருனால் பாண்டியா பந்துவீச்சு கொண்டிருந்தார். அப்போது இம்ரான் தாஹிர் அவரது பந்தை அடித்து ஆடினார். 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக ஆடுகளத்தில் கோபத்துடன் அவர் கடுமையாக காணப்பட்டார். க்ருனால் பாண்டியா மேலும் இம்ரான் தாகிர் அடித்த பந்து ஒன்று இஷான் கிஷான் கையில் பட்டு பவுண்டரிக்கு சென்று விட்டது.

krunal

இதனால் கடுப்பான ஒருநாள் பாண்டியா விராட் கோலி பயன்படுத்தும் ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி அவரை திட்டினார். போட்டி முழுவதும் இப்படித்தான் ஆக்ரோசமாக காணப்பட்டார் க்ருனால் பாண்டியா. நேற்றைய தோல்வியுடன் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -