- Advertisement -
ஐ.பி.எல்

2017-ல் செய்ததை மீண்டும் செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்திய க்ருனால் பாண்டியா – விவரம் இதோ

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் பணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.

வரலாற்று சாதனையை நிகழ்த்திய க்ருனால் பாண்டியா :

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் ஆர்.சி.பி அணியானது ஒருமுறை கூட கோப்பையை பற்றாத வேளையில் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றி ரசிகர்களுக்கு வரலாற்று வெற்றியை பரிசளித்தது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக சுழற்பந்து வீச்சாளர் க்ருனால் பாண்டியா திகழ்ந்தார்.

- Advertisement -

ஏனெனில் நேற்றைய போட்டியின் போது 191 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய பஞ்சாப் அணிக்கு தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் முட்டுக்கட்டை போட்ட க்ருனால் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு உத்திட்டார். இந்த போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய அவர் 12 டாட் பால்களை வீசியதோடு மட்டுமின்றி 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அவரது இந்த செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்திய பிரப்சிம்ரன்சிங் மற்றும் ஜாஸ் இங்கிலீஷ் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்திய அவர் குறைந்த அளவிலேயே ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் அவர் பெற்ற இந்த ஆட்டநாயகன் விருதின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் நபராக வரலாற்று சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி அசத்தியுள்ளார். அதன்படி அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2017 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய அவர் அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.

இதையும் படிங்க : அதுதான் டர்னிங் பாயின்ட்.. ஒரே பவுலர் எங்களை வீழ்த்தி விட்டார்.. ஆர்.சி.பி டீமிடம் தோற்ற பிறகு – ஷ்ரேயாஸ் வருத்தம்

அதன் பிறகு தற்போது நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றதன் மூலம் இரண்டு வெவ்வேறு சீசன்களின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்ற முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -